தன்னுடைய மகனின் 10 வருட கிர்க்கெட் வாழ்க்கையை வீணாக்கியது தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா என்ற பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் சஞ்சு சாம்சன் தந்தை. இது குறித்தான முழு விவரத்தையும் பார்ப்போம்.
யுவராஜ் சிங்கின் தந்தை தனது மகனின் கிரிக்கெட் கெரியர் வீணானதற்கு தோனிதான் காரணம் என்று பலமுறை கூறியிருக்கிறார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். இதனையடுத்து அடுத்து ஒரு தந்தை அதே குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த அவர் கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி நிலையான வாய்ப்பு கிடைக்காமல் திணறினார். அதேசமயம் கிடைத்த ஓரிரு வாய்ப்புகளிலும் சஞ்சு ஒரு அரை சதம் கூட அடிக்காமல் இருந்ததால் விமர்சனங்கள் எழுந்தன.
ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் விளையாடுகிறார். இந்த ஆண்டு கூட இரண்டாவது முறையாக ராஜஸ்தான் அணியை ப்ளே ஆஃப் கொண்டு வந்தார்.
அந்தவகையில் ரோகித் ஷர்மா டி20 ஃபார்மெட்டிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், சஞ்சு சாம்சன் இந்திய அணியில் டி20 ஃபார்மெட்டில் நிலையான தொட்டக்க வீரராகிவுள்ளார்.
இந்தநிலையில் சஞ்சு சாம்சன் சமீபத்தில் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளார். அதாவது சர்வதேச டி20 தொடரில் தொடர்ந்து இரண்டு சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதுகுறித்து சஞ்சு சாம்சனின் தந்தை விஸ்வநாத் பேசியுள்ளார். அதாவது, “இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் எனது மகனின் 10 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிட்டார்கள்.
மேலும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்காமல் முன்னாள் பயிற்சியாளர் டிராவிடும் எனது மகனின் கெரியரை வீணடித்து விட்டார். ஆனால் அவர்கள் எவ்வளவு காயப்படுத்தினாலும், எனது மகன் சிக்கலை எதிர்கொண்டு சாதித்திருக்கிறார்." என்று பேசியுள்ளார்.