சொன்னதை செய்து முடித்த திலக் வர்மா… சூர்ய குமார் யாதவ் பகிர்ந்த ரகசியம்!

Tilak varma and Surya kumar yadav
Tilak varma and Surya kumar yadav
Published on

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையிம் சதம் அடித்த திலக் வர்மா குறித்து கேப்டன் சூர்ய குமார் யாதவ் பேசியிருக்கிறார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றன. இந்திய அணி சூர்ய குமார் யாதவ் தலைமையில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்று சமநிலையில் இருந்தது.

இதனையடுத்து நேற்று மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 2வது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் இணைந்து விளையாடினர். இருவரும் அதிரடியாக விளையாடி வந்தனர். அபிஷேக் ஷர்மா அரை சதம் அடித்து வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், ஹார்திக் 18 ரன்களிலும், ரிங்கு சிங் 8 ரன்களிலும் வெளியேறினர். அதிரடியைத் தொடர்ந்த திலக் வர்மா சதமடித்து அசத்தினார்.

அந்தவகையில் இந்திய அணி 20 ஓவர் முடிவுக்கு 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா அவுட்டாகாமல் 107 ரன்கள் வரை எடுத்து களத்தில் இருந்தார்.

இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணி 220 என்ற இலக்குடன் களமிறங்கியது.

முதலில் இறங்கிய தென்னாப்பிரிக்கா வீரர்கள் தொடர்ந்து அவுட்டாகி வெளியேறினார்கள். இதனால் அந்த அணி சற்று தடுமாறியது. இதையடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் மற்றும் ஹென்ரிச் கிளாசென் நிதானமாக விளையாடினர். ஆனால் அவர்களும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பின் மார்கோ ஜான்சன் அதிரடியாக விளையாட தென் ஆப்பிரிக்க அணி கவுரமான நிலையை எட்டியது.

இதையும் படியுங்கள்:
IPL Update: சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும் – கே.எல்.ராகுல்!
Tilak varma and Surya kumar yadav

20 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 208 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு திலக் வர்மாதான் காரணம். அந்தவகையில் அவர் குறித்து கேப்டன் சூர்ய குமார் யாதவ் பேசியதைப் பார்ப்போம். “இரண்டாவது டி20 போட்டிக்குப் பின்னர் திலக் வர்மா எனது அறைக்கு வந்து, மூன்றாவது இடத்தில் விளையாட வாய்ப்பு கொடுங்கள், நான் நன்றாக ஆட விரும்புகிறேன் என்று சொன்னார். தாராளமாக ஆடுங்கள் என்றேன். அவர் சொன்னதை செய்து விட்டார்" என்று பேசினார்.


Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com