47 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலிக்கு கோப்பையை பெற்று தந்த ஜன்னிக் சின்னர்!

Italy won the Davis Cup 2023
Italy won the Davis Cup 2023

இத்தாலி 47 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக டென்னிஸில் டேவிஸ் கோப்பையை வென்றுள்ளது. ஸ்பெயின் நாட்டின் மலாகாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜன்னிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டீ மினாவரை 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வென்று டேவிஸ் கோப்பையை கைப்பற்றினார். 1976 ஆம் ஆண்டுக்கு பிறகு இத்தாலி டேவிஸ் கோப்பையை வென்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.

முதல் போட்டியில் இத்தாலியின் மாட்டியோ அர்னால்டி, கடுமையாக போராடி அலெக்ஸி பாப்பிரின்னை 7-5,2-6,6-4 என்ற செட்கணக்கில் வென்றார்.

எனினும் ஜன்னிக், அலெக்ஸ் டீ மினாருக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றியை உறுதிசெய்தார். சின்னருக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரம்போல் தெரிகிறது. இறுதிப் போட்டியில் ஜன்னிக்கின் கையே ஓங்கியிருந்த்து. அதனால் அவர் மினாரை 6-3, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார்.

நாங்கள் இளைஞர்கள், வாழ்க்கையில் எப்படியாவது ஒரு முறை பட்டம் வென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்போது வெற்றியை கையில் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் சின்னர்.

இந்த போட்டியில் சின்னரின் பயணம் அற்புதமாக இருந்தது. ஆஸ்திரேலியாவை சந்திப்பதற்கு முன்னதாக இத்தாலி, செர்பியாவை சந்திக்க வேண்டியிருந்தது. அதிலும் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தலைமையிலான அணியை  வெல்வது சவாலாக இருந்தது. ஆனாலும், அரையிறுதியில்  சின்னர், ஜோகோவிச்சை 6-2,2-6,7-5 என்ற செட் கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார்.

22 வயதான சின்னரின் பயணம் அத்துடன் நிற்கவில்லை. சின்னர், லோரென்ஸோ சோனேகோ ஜோடி இரட்டையர் ஆட்டத்தில் ஜோகோவிச் மற்றும் மியோமிர் கெக்மனோவிச் ஜோடியை 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

இதையும் படியுங்கள்:
அடங்க மறு: நிட்டோ ATP (ஏடிபி) போட்டி - ரோஜர் ஃபெடரின் சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்!
Italy won the Davis Cup 2023

47 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக டேவிக் கோப்பையை வென்ற ஜன்னிக் சின்னருக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜி மெலோனி பாராட்டுத் தெரிவித்துள்ளார். சிறப்பாக விளையாடி இத்தாலிக்கு பெருமை சேர்த்த வீரர்கள், அதற்காக உழைத்த ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர், தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இதனிடையே சின்னர், தமது குழுவீரர் மாடியோ பெரெட்டனி மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மாட்டியோ காயம் காரணமாக டேவிஸ் கோப்பை போட்டியில் பங்குபெறவில்லை. எனினும் போட்டியை நேரில் காண அவர் மலாகா வந்திருந்தார். எங்களுக்காக நேரில் வந்து, எங்களுக்கு ஊக்கம் அளித்த அவருக்கு எனது நன்றி என்று சின்னர் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com