

ஜூன் 12-ம் தேதி முதல் , ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதற்கான அறிமுக கூட்டம் நேற்று இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு டி20 உலக கோப்பையை அறிமுகம் செய்து பேசிய ஐசிசி தலைவர் ஜெய்ஷா " இந்த டி 20 உலகக் கோப்பை தொடர் மகளிர் கிரிக்கெட்டிற்கு ஒரு மைல் கல்லாகும். இதுவரை நடத்தப்பட்ட மகளிர் டி 20 உலகக் கோப்பை தொடர்களில் இது மிகவும் விறுவிறுப்பாக மற்றும் குறிக்கோளுடன் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று கூறினார்.
இந்த டி 20 மகளிர் உலகக் கோப்பை அறிமுக கூட்டத்தில் இந்தியா உட்பட 12 சர்வதேச மகளிர் அணிகள் கலந்து கொண்டுள்ளன. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாமில் ஜூன் 12 அன்று முதல் இந்த தொடர் தொடங்க உள்ளது. 2009 ஆம் ஆண்டு முதன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் , சர்வதேச தலைவர் அளவில் மகளிர் கிரிக்கெட்டிற்கு அங்கீகாரத்தை தேடி தந்துள்ளது. அதன் பின்னர் மகளிர் கிரிக்கெட்டிற்கு என்று ரசிகர்கள் வட்டாரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதுவரை 9 சர்வதேச டி 20 மகளிர் உலகைக்கோப்பை தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. அதன் இறுதிப் போட்டிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் மட்டுமே உலகக் கோப்பையை வென்றுள்ளது. இதுவரை டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கமே அதிகமாக இருந்து வந்துள்ளது. 2010 முதல் 2023 வரை நடைபெற்ற போட்டிகளில் இதுவரை ஆறு முறை கோப்பையை கைப்பற்றி இமாலய சாதனையை செய்துள்ளது.
முக்கியமாக 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் ஹர்ட்ரிக் வெற்றி பெற்று சாதனையையும் செய்துள்ளது. இதில் 2020-ல் மெல்போர்னில் நடைபெற்ற நடந்த இறுதிப் போட்டியில் , இந்தியாவிற்கு எதிராக விளையாடி கோப்பையை கைப்பற்றியது.
இந்தக் காரணங்களினால் ஆஸ்திரேலியா அணி, டி 20 உலகக் கோப்பை தொடரில் மிகவும் ஆதிக்கம் நிறைந்த அணியாகவே உள்ளது. ஆயினும் 2024 ஆண்டில் அமீரகத்தில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் , நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்கா அணியை தோற்கடித்து முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனையை படைத்தது.
பெரும்பாலும் இறுதிப் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி இடம்பெறுகிறது. ஆயினும் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து, இங்கிலாந்து மகளிர் அணி கோப்பையை வென்றது. அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணி தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனால், பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் ஆஸ்திரேலியா அணி தோற்கடிக்க முடியாத அணி அல்ல, என்பது நிரூபணம் ஆகி உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை தற்போது கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் மகளிர் அணி மிகவும் வலிமையாக உள்ளது. இந்திய மகளிர் அணி , கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் சிறப்பான பல வெற்றிகளை குவித்து வருகிறது. மேலும் துடிப்புமிக்க வீராங்கனைகள் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தருவார்கள் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு இந்திய மகளிர் அணி ஐசிசி 50 ஓவர் உலக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றதைப் போல் , இப்போது டி20 உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் முனைப்பில் மகளிர் அணியினர் அணியில் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.