"அல்கராஸை வீழ்த்துவதே லட்சியம்" - Jannik Sinner!

Jannik Sinner.
Jannik Sinner.

ஆஸ்திரேலியே ஓபன் 2024 போட்டியில் கோப்பை வென்றதால் இத்தாலிய வீர்ர் ஜானிக் சின்னர் தளர்ந்துவிடவில்லை. அவர் இன்னும் வேகம் காட்டுவார். கார்லோஸ் அல்கராஸை வீழ்த்துவதே சின்னரின் லட்சியம் என்கிறார் அவரது பயிற்சியாளர் டார்ரென் காஹில்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இத்தாலிய வீரரான ஜானிக் சின்னர் முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். பரபரப்பான இறுதி ஆட்டத்தில்  சின்னர், டேனில் மெத்வதேவை 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.

நான்காவது செட்டில் ஒரு முக்கியமான திருப்பமாக 3-3 என்ற நிலையில் ஒரு பிரேக் பாயின்டை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு 4-2 என முன்னிலை பெற்றார். அதன் பிறகு ஆட்டத்தில் அவரது கையே ஓங்கியிருந்த்து. அதைத் தொடர்ந்து தனது வரலாற்று வெற்றியை அவர் உறுதிப்படுத்தினார்.

ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பின் சின்னர் இந்த சாதனையை முறியடித்து கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றியை கைப்பிடித்த இரண்டாவது இத்தாலிய வீர்ர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஜானிக் சின்னர் ஒரு திறமையான டென்னிஸ் விளையாட்டு  இளம் வீரரான அவர், எதையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். மேலும் புதுமையை புகுத்த முயல்கிறார். ஆஸ்திரேலிய வெற்றியுடன் அவர் நின்றுவிடப் போவதில்லை. அவர் இன்னும் பலவற்றை சாதிக்க இருக்கிறார் என்றார் பயிற்சியாளர் காஹில்.

ஜானிக் சின்னர் அதிகம் சாதிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவரிடம் சிறப்பான திறமைகள் உள்ளன. அவர் பந்தை எதிர்கொண்டு திருப்பியனுப்பும் விதமே தனித்துவமானது.

எந்த போட்டியாக இருந்தாலும் டென்னிஸ் ஆடுகளத்தில் நடப்பவைகளை அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். தனது ஆட்டத்திலும் புதுமைகளை புகுத்தி வருகிறார். இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதே அவரது எண்ணமாகும். எனவே அவரது வெற்றி தொடரும் என்றார் காஹில்.

இதையும் படியுங்கள்:
ஹீரோவானார் விஜய் டிவி ரக்‌ஷன்.. வெளியானது படத்தின் டீசர்!
Jannik Sinner.

ஸ்பெயின் நாட்டு வீரர் கார்லோஸ் அல்கராஸுக்கு இணையாக உயர வேண்டும் என்பது அவரது ஆசை. இன்னும் சொல்லப்போனால் அல்கராஸை வெல்ல வேண்டும் என்பது சின்னரின் கனவுகளில் ஒன்றாகும்.

இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக கார்லோஸ் அல்காரஸ் திகழ்கிறார். அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். கார்லோஸை போல திறமையான ஆட்டத்தை வளர்த்துக் கொள்வதுடன் அவரை ஒரு போட்டியிலாவது வென்றுவிட வேண்டும் என்பது சின்னரின் ஆசை. அதற்காக தொடர்ந்து போராடவும் அவர் தயாராக இருக்கிறார் என்றார் காஹில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com