விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் சினெர்..!

wimbeldon final match
wimbeldon final match Source : ummid
Published on

விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முன்னணி வீரர்களான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோர் மோதனர். முதல் செட்டை அல்காரஸ் 6-4 என வென்றார். அடுத்த இரு செட்டை சின்னர் 6-4, 6-4 என வசப்படுத்தினார். நான்காவது செட்டில் 5-3 என முன்னிலை பெற்றார் சின்னர். தொடர்ந்து அசத்திய இவர், 6-4 என கைப்பற்றினார்.

3 மணிநேரம் 4 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 4-6,6-4,6-4,6-4 என்ற நேர் செட்களில் கார்லசை வீழ்த்தி சினெர் அபார வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் முதன்முதலாக சினெர் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.இந்த வெற்றியின் மூலம், பிரெஞ்ச் ஓபன் பைனலில் (2024) அல்காரசிடம் கண்ட தோல்விக்கும் சின்னர் பதிலடி கொடுத்தார். மேலும், விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' பட்டம் வெல்லும் அல்காரஸ் கனவும் தகர்ந்தது.

இதையும் படியுங்கள்:
முதல்முறையாக உலக கோப்பைக்கு தகுதிபெற்ற இத்தாலி கிரிக்கெட் அணி!
wimbeldon final match

ஜூனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் சுலோவாகியாவின் 16 வயது, மியா போஹன்கோவா, அமெரிக்காவின் ஜூலியெட்டா பரேஜா மோதினர். முதல் செட்டை 6-3 என வென்ற போஹன்கோவா, அடுத்த செட்டையும் 6-1 என எளிதாக வசப்படுத்தினார்.

ஒரு மணி நேரம், 8 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போஹன்கோவா, 6-3, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பை கைப்பற்றினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com