மீண்டும் ஜெய் ஷா ராஜ்ஜியம்: ஐசிசி தலைவராக 2-வது முறையாக போட்டியின்றித் தேர்வு!

பாலியில் நடந்த ஐசிசி கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட ஜெய் ஷாவின் அடுத்தகட்ட அதிரடித் திட்டங்கள்!
jai shah
Jai shah ICC President The hindu
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

பாலியில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ICC ) கூட்டத்தொடரில், ஐசிசி இயக்குனர்கள் ஒருமனதாக போட்டியின்றி ஜெய்ஷாவை ஐசிசியின் தலைவராக தேர்ந்தெடுத்தனர். அவர் ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வது இரண்டாவது முறையாகும். கடந்த முறையும் ஐசிசி தலைவர் பதவிக்கு ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

முதன்முதலாக ஜெய் ஷா 2024 , டிசம்பர் 1 ஆம் தேதி ஐசிசி யின் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். அப்போது 36 வயதில் அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்கும் அளவிற்கு கிரிக்கெட் உலகில் தனது செல்வாக்கை நிரூபித்திருந்தார். இந்த பதவியினை வகிக்கும் முன்னர் அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளராகவும் , ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பொறுப்பிலிருந்தார்.

மிகவும் இளம் வயதிலேயே கிரிக்கெட் வாரியத்தின் பல்வேறு பதவிகளை வகித்த நபர் என்ற பெருமை ஜெய்ஷாவிற்கே செல்லும். ஜெய்ஷாவின் ஐசிசி பதவி காலம் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவில் இடம்பெறும் கிரிக்கெட் போட்டிகள் வரை செல்லுபடியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் செயலாளர் பதவி வகித்தபோதே, ஜெய்ஷா இந்தியாவில் கிரிக்கெட் சார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அளப்பரிய பங்களிப்பை வழங்கி இருந்தார். இவரது பெரும் முயற்சியின் கீழ் , இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு , அவர்களுக்கும் ஆடவர் கிரிக்கெட்டில் வீரர்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்கும் , அவர்களின் தொடர்ச்சியான வெற்றிகரமான செயல்பாட்டிற்கும் பின்னணியில் ஜெய்ஷாவின் ஆதரவு முக்கியமானது.

ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மேலும் பிரபலப்படுத்த முயற்சி செய்து வருகிறது. ஜெய்ஷா ஐசிசி உறுப்பினராக இருக்கும் பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் போட்டி வளர்ச்சிக்காக செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். கால்பந்து போட்டிகளுக்கு இணையான சர்வதேச செல்வாக்கினை, கிரிக்கெட் தொடருக்கும் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலம் முயற்சி செய்து வருகிறார். மிகவும் குறிப்பாக ஆசியாவை சேர்ந்த பல்வேறு நாடுகளையும் , ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த நாடுகளையும் கிரிக்கெட்டில் இணைத்து, அவர்களை முன்னணி அணிகளாக மாற்றும் முயற்சிகளிலும் ஐசிசி ஈடுபட்டு வருகிறது.

Jay shah and womens teams
ICC T20 Womens world cup starting image credit: Times of india

தனது பதவி குறித்து பேசிய ஜெய்ஷா , "இந்த பதவியில் தான் செயல்படுவது தனக்கு ஒரு கடமையாகவும் , மீண்டும் இந்த பதவி கிடைத்தது தனக்கு பாக்கியமாகவும் , தன் மீது நம்பிக்கை வைத்திருந்த ஐசிசிக்கு நன்றியையும் தெரிவித்திருந்தார். மேலும் அவர் , நமது விளையாட்டு வரலாற்றில் முக்கியமான காலகட்டத்தில் நுழைந்துள்ளோம். ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட் இடம் பெறுவது, புதிய தலைமுறை வீரர்களுக்கு உத்வேகமளிக்கவும் , புதிய பார்வையாளர்களுக்கு நமது விளையாட்டை அறிமுகப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

வெற்றிகரமான செயல்பாடுகளை தாண்டி , ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள், வணிகப் பங்காளர்கள் மற்றும் பிற முக்கியப் பங்குதாரர்கள் ஆகியோர்களை இணைத்து இந்த விளையாட்டிற்கு நீண்ட எதிர்காலத்தை நாம் கட்டமைக்க வேண்டும். ஐசிசியின் இலக்குகளை அடைந்து, வருங்கால சந்ததியினருக்கு ஒரு நீண்ட பாரம்பரியத்தை விட்டு செல்வதை உறுதி செய்து கவனம் செலுத்துவேன்," என்று ஜெய் ஷா கூறியிருந்தார்.