சச்சினை முந்துவாரா ஜோ ரூட்? கிரிக்கெட் உலகை வியக்க வைக்கும் வரலாற்றுப் போட்டி!

ஹெடிங்லே மைதானத்தின் சிறுவன் முதல் உலக சாதனையாளர் வரை ஜோ ரூட்டின் வியக்கத்தக்க பயணம்.
Joe root sachin
joe root Ndtv sports
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்ட உள்ளார். தற்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் செய்திருந்த சாதனைகளை முறியடிக்கும் கட்டத்தில் உள்ளார். சில தினங்களுக்கு முன்னர் தான் அவர் சர்வதேசப் போட்டிகளில் 23,000 ரன்களை அதிவேகமாக கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை சச்சினிடம் இருந்து பெற்றுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்களை குவித்து உலக சாதனையை சச்சின் செய்துள்ளார். பென் ஸ்டோக்ஸின் ஓய்வுக்குப் பிறகு சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பொறுப்பை ஏற்ற ரூட் , சச்சினின் சாதனையை தகர்க்கும் முனைப்பில் உள்ளார். சச்சின் சாதனையை தகர்க்க அவருக்கு இன்னும் 1,643 ரன்கள் தேவைப்படுகிறது. அதே நேரம் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (200) மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் (188) ஆகியோருக்குப் பிறகு, ஜோ ரூட் மூன்றாவது இடத்தில் உள்ளார். தற்போது தனது கனவுகள் நினைவான மகிழ்ச்சியில் இருக்கும் ஜோ ரூட் ஊடகத்திற்கும் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது தனது சிறுவயது கிரிக்கெட் நினைவுகளை ஜோ ரூட் கூறியுள்ளார். அவர் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமானது இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை நேரில் கண்ட அனுபவத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

அன்று இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து பவுலர்களை இந்திய அணி வீரர்கள் துவம்சம் செய்ததை குறிப்பிட்டுள்ளார். அப்போதைய இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர்களான ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இங்கிலாந்து அணியை துவைத்து எடுத்தனர்.

joe root sachin
joe root sachinsports keeda

அன்றைய ஆட்டத்தில் ராகுல் டிராவிட் (148) மற்றும் சௌரவ் கங்குலி (128) ரன்களைக் குவித்தனர், அதில் சச்சின் எடுத்த ரன்கள் எனக்கு தெரியாது.அந்தப் போட்டியில் இந்திய அணி 600 ரன்களுக்கு மேல் குவித்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியினை காண தான் தனது உள்ளூர் அணி வீரர்களுடன் மைதானத்திற்கு சென்றதையும் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் அதிவேகமாக 23,000 ரன்களை அதிவேகமாக கடந்த அவர்களின் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். அந்தப் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் , இலங்கையின் குமார் சங்ககாரா , ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் , இலங்கையின் ஜெயவர்த்தனே, தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் மற்றும் இந்தியாவின் ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற பேட்ஸ்மேன்கள் ஆவர்.

ஒரு காலத்தில் சச்சினின் ஆட்டத்தை மைதானத்தில் கண்டு மகிழ்ந்த ஒரு சிறுவன், தற்போது அவரது சாதனைகளை தகர்க்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். ஜோ ரூட்டின் கிரிக்கெட் பயணத்தில் அவர் கடந்த சாதனைகளை மற்ற கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com