ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கலம் வென்று அசத்திய இந்திய அணி..!

Junior Hockey World Cup:India Win Bronze Medal
India Win Bronze MedalImage credit-timesnownews.com
Published on

கடந்த 28-ந் தேதி தொடங்கிய ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 14-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்சில் உள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. 24 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தொடரில் லீக் சுற்று முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு வந்தன.

கடந்த 5-ம்தேதி நடைபெற்ற கால்இறுதிப்போட்டியில் இந்தியா- பெல்ஜியம் அணிகள் மோதின. அதில் இந்தியா அணி 4-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

இதில் நேற்று நடந்த சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் நடைபெற்றது. ‘நம்பர் ஒன்’ அணியான ஜெர்மனி, 4-ம் நிலை அணியான ஸ்பெயினை எதிர்கொண்டது. இதில் ஜெர்மனி அணி, 3-2 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

அதனை தொடர்ந்து வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - அர்ஜென்டினா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-வது பாதியில் எழுச்சி பெற்ற இந்திய அணி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது.

கடைசியில் இந்திய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, தனது முதல் வெண்கலப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியது.

அதாவது பதினொரு நிமிடங்களில் நான்கு கோல்களை அடித்து அர்ஜென்டினாவை எதிர்த்து 4-2 என்ற கணக்கில் பரபரப்பான வெற்றியைப் பதிவு செய்து, போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, ஹாக்கி இந்தியா வீரர்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் பரிசாக அறிவித்தது.

இதையும் படியுங்கள்:
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்..!
Junior Hockey World Cup:India Win Bronze Medal

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் இந்திய அணி 1997-ல் வெள்ளி பதக்கத்தையும், 2001, 2016-ம் ஆண்டுகளில் தங்கப்பதக்கத்தையும், தற்போது (2025) வெண்கலம் பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com