இந்திய கால்பந்து கூட்டமைப்பு உரிமம் ரத்து! 

இந்திய கால்பந்து கூட்டமைப்பு உரிமம் ரத்து! 
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

ந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, தற்காலிகமாக ஃபிபா ரத்து செய்ததாக அறிவித்துள்ளது. 

இந்திய கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் இந்த கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் என சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) அறிவித்துள்ளது. 

இந்நிலையில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற அக்டோபர் மாதம் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடத்த திட்டமிடப் பட்டது.

2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டி முதல் முறையாக இந்தியாவில் நடைபெற இருந்த நிலையில், அதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. லக கோப்பை மகளிர் கால்பந்து தொடரை வேறு நாட்டில் நடைபெறச் செய்ய ஃபிபா முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

logo
Kalki Online
kalkionline.com