

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரின்பீல்ட் ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாசை வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி ஏன் பவுலிங்கை தேர்வு செய்தது? என்று கேள்வி எழும்பும் வகையில் மேற்கிந்திய தீவுகளை அணியின் பேட்டிங் இருந்தது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் முதலில் களம் இறங்கிய ஜான் கேம்பல் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் இணைந்து, 19 ஓவர்கள் வரை விக்கெட்டுகள் எதுவும் விழாமல் 135 ரன்களைக் குவித்தனர். இந்திய அணி பவுலர்கள் ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தனர். கேம்பல் 62 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுபுறம் கிரீவ்ஸ்(101) நிலைத்து நின்று ஆடி தனது முதல் சதத்தினை பதிவு செய்தார். சதம் அடித்த உடனேயே அவரை குல்தீப் யாதவ் வெளியேற்றினார்.
அடுத்து வந்தவர்கள் சராசரியாக ரன்களை எடுத்து வெளியேறினர். அமீர் ஜாங்கூ மட்டும் அதிரடியாக விளையாடி 1 சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகளை அடித்து 58 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்களை மேற்கிந்திய தீவுகள் அணி குவித்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது விரட்டலை தொடங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சுப்மன் கில்லுடன் இணைந்து விராட் கோலி ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டினார். இந்த இருவர் கூட்டணி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. கில் நிதானமாக விளையாடி தனது 10 வது சதம் (110) அடித்தார். மறுபுறம் மிகவும் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 9 சிக்சர்களை பறக்க விட்டு மேற்கிந்திய தீவுகள் அணியை கதறவிட்டார்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் 10 பவுண்டரிகளையும் அடித்தார். 88 பந்துகளில் 139 ரன்களை குவித்து தான் கிங் கோலி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். 41.2 ஓவர்களில், இந்திய அணி 2 விக்கெடுகளை மட்டுமே இழந்து 300 ரன்களை அடித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெரிய ஸ்கோரை எட்டிய இந்திய அணி 52 பந்துகளை மிச்சம் வைத்தது.
இந்தப் போட்டியின் மூலம் விராட் ஒருநாள் கிரிக்கெட்டில் 15000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனை படைத்தார். அத்துடன் 55 சதங்களை கடந்த மாபெரும் சாதனையும் அதே போட்டியில் நிகழ்த்தி காட்டினார். ஆட்டநாயகன் விருதுக்கு விராட் தேர்வு செய்யப்படுவார் என்று நினைத்திருக்கையில், குல்திவ் யாதவிற்கு அது வழங்கப்பட்டது. விருதினை பெற்றபோது குல்தீப் , "விராட் மற்றும் சுப்மன் இருக்கையில் தான் ஆட்டநாயகன் பெறுவது சங்கடமாக இருப்பதாக" குறிப்பிட்டார். இந்த தொடரின் அடுத்த போட்டி செப் 30 அன்று கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.