KKR vs DC: “ஐபிஎல் தொடரில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்” – ஸ்ரேயாஸ் கருத்து!

Shreyas Iyer
Shreyas Iyer
Published on

இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நேற்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளிடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி அபாரமாக வெற்றிபெற்றது. இதனையடுத்து போட்டியைக் கைப்பற்றிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி அளித்தார்.

கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஓப்பனராக களமிறங்கிய சுனில் நரைன் 39 பந்துகளில் 85 ரன்கள் எடுத்துத் தொடக்கத்திலேயே அணிக்கு அதிக ரன்களை சேர்க்க ஆரம்பித்தார். அதன்பின் அங்க்ரிஷ் 27 பந்துகளில் 54 ரன்களும் ரஸ்ஸல் 19 பந்துகளில் 41 ரன்களும் எடுத்தது டெல்லி அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது. அதேபோல் டெல்லி அணியில் பந்துவீசிய நார்ட்ஜே 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் எடுத்து சிறிதளவு கொல்கத்தா அணியின் ரன்களைக் குறைக்க முயற்சித்தார்.

பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணியில் வழக்கம் போல் பண்ட் அதிரடி ஆட்டத்தில் இறங்கினாலும் அது இலக்கிற்குப் போதுமானதாக இல்லை. அவர் 25 பந்துகளில் 55 ரன்களுடன் வெளியேறினார். ட்ரிஸ்டன் 32 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். அடுத்ததாக அதிகபட்ச ரன்கள் எடுத்தது டேவிட் வார்னர்தான். இவர் 13 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் டெல்லி அணி இலக்கை அடைய முடியாமல் 166 ரன்களுடன் சுருண்டது.

106 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியைக் கைப்பற்றியது கொல்கத்தா அணி. இதனையடுத்து அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது,

“ நாங்கள் 270 ரன்கள் அடிப்போம் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எங்கள் கணிப்புப்படி 210 முதல் 220 வரை அடிப்போம் என்றுதான் நினைத்தோம். சுனில் நரேனை ஓப்பனராக அதிரடி ஆட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பதற்காகதான் வைத்திருக்கிறோம். அவர் ஒருவேளை விக்கெட் இழந்தார் என்றால், முன் வரிசை பேட்ஸ்மேன்கள் அதிரடியில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தோம். அதுதான் எங்களின் திட்டம்.

இளம் வீரர் ரகுவான்சி அபாரமாக விளையாடினார் . முதல் பந்து முதலே அச்சமின்றி விளையாடினார். இவர் சூழலுக்கு ஏற்ப திட்டமிட்டு விளையாடுகிறார். அதேபோல் ஷாட்கள் எல்லாம் புத்திசாலியாகவும் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
LSG vs RCB: "ஒவ்வொரு போட்டிக்குப் பின்னரும் ஐஸ் குளியல்" – மயங்க் யாதவ்!
Shreyas Iyer

அதேபோல் மிட்சல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் அணியின் வெற்றிக்காகவே விளையாடுகின்றனர். எங்களின் வீரர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் வெற்றிக்கும் ஆதரவாக இருக்கிறார்கள். ஹர்ஷித் ராணா காயம் காரணமாக அணியில் இல்லை. அவர் எப்போது அணிக்குத் திரும்புவார் என்றும் தெரியவில்லை. வைபவ் முதலில் ரன்களை விட்டுக்கொடுத்தாலும் அதன்பின்னர் அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுபோன்றப் போராட்ட குணம் கொண்ட வீரர்களையே நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.

மூன்று வெற்றிகளைப் பெற்றுவிட்டதால் நாங்கள் ஆடக் கூடாது. எப்போதும் அமைதி காக்கவே வேண்டும். ஏனெனில், இது ஐபிஎல் தொடர். எப்போது எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்.” இவ்வாறு பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com