Mayank yadhav
Mayank yadhav

LSG vs RCB: "ஒவ்வொரு போட்டிக்குப் பின்னரும் ஐஸ் குளியல்" – மயங்க் யாதவ்!

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி பெங்களூரு அணியை தோல்வியடையச் செய்தது. லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய மயங்க் யாதவ் போட்டி முடிந்ததும் பேட்டி அளித்தார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது. லக்னோ அணியில் குவின்டன் டீ காக் 56 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடினார். பூரான் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அதேபோல் மார்க்ஸ் ஸ்டாயினிஸ் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணியில் மேக்ஸ்வேல் 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து ரன்களைக் கட்டுப்படுத்தினார்.

அதன்பின்னர் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில், லாம்ரார் 13 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். லக்னோ அணியை போல் பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ராஜட் பட்டிதர் 21 பந்துகளில் 29 ரன்களும், விராட் கோலி 16 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணியில் முக்கிய வீரர்கள் அனைவருமே எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை.

பெங்களூர் அணி சுருண்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மயங்க் யாதவ். இவர் மேக்ஸ்வெல், கேமரூன் மற்றும் பட்டிதர் ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்து ரன்களை சேர்க்கவிடாமல் தடுத்தார். 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 17 டாட் பால்கள் உட்பட 3 விக்கெட்டுகளை எடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். மயங்க் வெறும் 21 வயதில் 157 கிமீ வேகத்தில் பவுலிங் செய்து ஆச்சர்யப் படுத்தியுள்ளார். அந்தவகையில் போட்டி முடிந்து பேசிய இவர்,

“இந்த ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதை விடவும் லக்னோ அணியின் வெற்றிக்குப் பங்களித்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய அணிக்காக விளையாட வேண்டுமென்பதுதான் எனது இலக்கு. அதற்கான தொடக்கம்தான் இது. இன்னும் பயணிக்க நிறைய தூரம் உள்ளது. இந்த போட்டியை பொறுத்தவரை கேம்ரூன் க்ரீன் விக்கெட்டை ரசித்தேன்.

இதையும் படியுங்கள்:
MI Vs RR: தொடர்ந்து மூன்றாவது முறையாக ராஜஸ்தான் அணி வெற்றி!
Mayank yadhav

அதேபோல் உடல் காயமடையாமல் இருப்பதற்கு உடலை சரியாகப் பராமரிக்கிறேன். டயட்டை ஃபாலோ செய்வதோடு, பயிற்சி மற்றும் தூக்கத்தை சரியாகப் பின்பற்றுகிறேன். ஒவ்வொரு போட்டிக்குப் பின்னரும் ஐஸ் குளியல் போடுவது அடுத்த சாவலை எதிர்கொள்ளத் தயாராவதற்கு உதவியாக உள்ளது.” என்று பேசினார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com