ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி பிளே-ஆப் வாய்ப்பை தக்க வைத்தது கொல்கத்தா..!

கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி வாகை சூடியது.
Kolkata Knight Riders team
Kolkata Knight Riders teamimage credit-hindustantimes.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று நடக்கும் 65-வது லீக் ஆட்டத்தில் முன்னாள சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

4 வெற்றி, 8 தோல்வி கண்டு 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டு ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட மும்பை அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. இருப்பினும் சீசனை முடிந்த வரை உயரிய நிலையில் முடிக்க தீவிரம் காட்டுகிறது.

5 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை என 11 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி எஞ்சிய இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் வாய்ப்பில் தொடர முடியும். அதனால் இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா மோதலாகும். இதில் தோற்றால் வெளியேற வேண்டியது தான்.

இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய மும்பை அணி 20 ஒவர் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி இறுதியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை அசால்டாக எட்டியது.

இதன் மூலம் 6-வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா அணி பிளே-ஆப் வாய்ப்பை தக்க வைத்தது.

logo
Kalki Online
kalkionline.com