

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் ஆடி ஒரு புள்ளி மட்டுமே எடுத்து தத்தளித்து வருகிறது. அதுவும் மழையால் ஆட்டம் ரத்தானதால் அந்த புள்ளி கிடைத்தது. ராஜஸ்தான் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 1 தோல்வியை கண்டுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 16-ல் கொல்கத்தாவும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது.
இதற்கிடையே இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதனை தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடி இறுதியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர் தோல்வியை சந்தித்து வந்த கொல்கத்தா அணி இதன் மூலம் முதல் வெற்றியை ருசித்துள்ளது.