T20 தெரியும்! T2 தெரியுமா? தெறிக்கவிடும் அடுத்த கட்டம்!

T20-T2
T20-T2
Published on

கிட்ட தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளாக சர்வதேச அளவில் விளையாடப் பட்டு வரும் கிரிக்கெட் பல மாறுதல்களை சந்தித்து விட்டது. தொடர்ந்து சந்திக்கும். உதாரணமாக, பல வருடங்கள் இரண்டு நடுவர்கள் இருந்த நிலைமை காணாமல் போய், மூன்றாவது நடுவர், டிவி நடுவர் என்று நீண்டு விட்டது. இவர்களை தவிர ரெபெரீ வேறு.

அதே போல் கிரிக்கெட் சம்பந்தப்பட்டத்தில் பல் வேறு அம்சங்களில் மாற்றங்கள் நடைப்பெற்றுக் கொண்டே இருக்கின்றன, இருக்கும். ஐ பி எல் போட்டியும் மாற்றங்களுக்கு உட்பட்டதே. அடுத்த கட்டமாக இந்த வகை மாற்றங்கள் ஐ பி எல் கிரிக்கெட்டில் இடம் பெற்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை:-

  • டென்னிஸ் ஆட்டங்களில் இருப்பது போல் Non Playing Captain என்ற புதிய பதவியுடன் ஒரு ஆட்டக்காரர் அறிமுகப்படுத்தப் படலாம் . அவர் டக் அவுட்டிலிருந்து, நடைப் பெறும் மேட்சின் போக்கிற்கு ஏற்ப அறிவுறுத்தல்கள் அளிக்கலாம்.

  • ஐ பி எல் போட்டிகளில் பல கோடி ரூபாய் பணம் ஈடுபடுத்தப் பட்டுள்ளது. உரிமையாளர்கள், விளையாட்டு வீரர்கள், விளம்பரதாளர்கள், டிக்கெட்டுக்கள் விற்பனை, அதை வாங்கி பார்க்க கூடும் ரசிகர்கள், டிவி டெலிகாஸ்ட் போன்ற பல வகைகளில் வருமானம் கூடுகின்றது. ரசிகர்களை சுண்டி இழுக்கும் (attract) கட்டாயத்தின் பேரில் தற்பொழுதைய முறைகள் மாற்றி அமைக்க வேண்டி வரும்.

  • ஒரே நாளில் ஒரே டிக்கெட்டிற்கு, ஒரு மேட்ச்சுக்கு பதிலாக இரண்டு மேட்சுக்கள் அறிமுக படுத்தும் சூழ்நிலை வெகு தூரத்தில் இல்லை. அப்படி ஏற்பட்டால் டி 20 வடிவம் (T20 format) வழி விட வேண்டியிருக்கும்.

  • 20 ஓவர்கள் மேட்ச்சுக்களுக்கு பதிலாக, 10 ஓவர்கள் மேட்ச்சுக்களை, எதிர்பார்க்கலாம். அப்படி அறிமுகப் படுத்தப் பட்டால், ஒரே நாளில் தொடர்ந்து இரண்டு மேட்ச்சுக்கள் நடப்பதும், காண்பதும் சாத்தியம் ஆகும்.

  • புதுமை புகுத்துதல் (innovation) யார் வேண்டுமானாலும் அறிமுகப் படுத்தலாம். ஒரு முறை ஹைதராபத்திற்கு சென்று இருந்த பொழுது ஒரு விஷயம் அசத்தியது. அங்கு பயணம் செய்த கால் டாக்ஸி ஓட்டுனர் கூறினார், வாரத்தில் ஞாயிற்று கிழமை மதியம் கட்டாயம் கிரிக்கெட் மேட்ச் விளையாடுவேன். T20 மேட்ச்சா, என்று வினவியதற்கு, சிரித்து விட்டு, T2 மேட்ச் என்று கூறி விளக்கினார். வெற்றி பெரும் அணிக்கு மற்றும் ஆட்ட நாயகருக்கு ரொக்க பரிசு என்று கூறி அசத்தினார். அந்த T2 மேட்சின் விதி முறைகள் வித்தியாசமாகவும், கவரும் வகையிலும் இருந்தது. ஆட்டம் விரு விருப்பாக செல்லவும், பார்க்க கூடும் ரசிகர்களை மகிழ்விக்கவும் அந்த இரண்டு ஓவர் மேட்ச்சில் ஒரு பவுலர் ஒரே ஒரு ஓவர் பந்து வீசுவார். எடுக்க வேண்டிய ரன்கள், இரண்டு வகை மட்டும் தான். பவுண்டரி மற்றும் சிக்ஸர். ஆட்டங்கள் எப்படி இருக்கும் என்று வினவியதற்கு, வந்த பதில் அதன் லெவலே தனி ரகம் என்றார் மகிழ்ச்சியுடன்.

இதையும் படியுங்கள்:
T20 World Cup: “அணியில் இளம் வீரர்கள் நிறையே பேர் வேண்டும். விராட், ரோஹித் வேண்டாம்.” – யுவராஜ் சிங்
T20-T2

இப்படிப் பட்ட புதுமைகள் வர துவங்கி விட்ட இந்த காலத்தில், வெகு வேகமாக நகரும் காலத்தின் கட்டாயமாக, ஐ பி எல் போட்டிகளிலும் புதுமைகள் புகுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு உட்பட வேண்டியிருக்கும். அது தவிர பல கோடி ரூபாய்கள் கொடுத்து ஏலத்தில் வாங்கப்படும் வீரர்கள், சரிவர விளையாடாவிட்டால் அவர்களுக்கு கொடுக்கப்படும் விலையில், சில சதவீதங்கள் திரும்ப பெறப்படும் (recover).

ஐ பி எல் போட்டிகளில் பங்கு பெரும் அணிகளின் உரிமையாளர்கள், பல கோடிகள் முதலீடு செய்வதால், அவர்கள் லாபம் சம்பாதிப்பதில் தங்கள் கவனம் செலுத்துவது தவறு ஒன்றும் இல்லை என்ற வாதம் முன்வைக்கப்படும். பங்கு பெரும் வீரர்களிடம் இருந்து அதிக பங்களிப்பும், ரிசல்ட்டும் எதிர்பார்க்கப் படும். எதிர் வரும் காலங்களில் ஐ பி எல் போட்டிகளில் , போட்டியின் வேகம் அதிகரிக்கும் பல வகை மாற்றங்கள் அறிமுகப் படுத்தப் படும் என்பது நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com