T20 World Cup: “அணியில் இளம் வீரர்கள் நிறையே பேர் வேண்டும். விராட், ரோஹித் வேண்டாம்.” – யுவராஜ் சிங்

Yuvaraj singh and Virat Kohli
Yuvaraj singh and Virat Kohli

T20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் தொடங்கவுள்ள நிலையில், முன்னாள் வீரர் யுவராஜ் சிங், "ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோரை அணியில் சேர்க்க வேண்டாம் என்றும், இளம் வீரர்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும்." என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பைத் தொடங்குகிறது. 20 அணிகள் பங்குபெறும் இந்த உலகக்கோப்பைத் தொடரில், இந்திய அணியின் வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முன்னாள் வீரர்கள் பலர் எந்த வீரர்களையெல்லாம் தேர்ந்தெடுக்கலாம் என்று ஆலோசனை கூறி வருகின்றனர். 

கடந்த பிப்ரவரி மாதம் ரோஹித் ஷர்மா டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விராட் கோலி விளையாடுவாரா? என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தன. இதனையடுத்து விராட் கோலியும் கட்டாயமாக அணியில் விளையாடுவார் என்று பிசிசிஐ தேர்வு குழு ஆணையத்திலிருந்து செய்திகள் கசிந்தன. இந்தநிலையில் இந்த மாதம் கடைசியில் டி20 உலகக்கோப்பையில் விளையாடப்போகும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வரும் 28ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் கூறியதாவது, “வீரர்களுக்கு வயதாகும்போது மக்கள் வயதைப் பற்றி பேசமாட்டார்கள். ஃபார்மின் மற்றும் ஃபார்ம் அவுட் பற்றிதான் பேசுவார்கள். விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் இந்தியாவிற்காக விளையாடிய மகத்தான வீரர்கள். எனவே, விரும்பும்போது அவர்கள் ஓய்வு பெறுவதற்குத் தகுதியானவர்கள். இருப்பினும், டி20 பார்மட்டில் நான் நிறைய இளம் வீரர்களைப் பார்க்க விரும்பிகிறேன்.

இதையும் படியுங்கள்:
அசுர வளர்ச்சியை நோக்கி மகளிர் கால்பந்து அணி!
Yuvaraj singh and Virat Kohli

ஏனெனில், இது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக விளையாடும் அனுபவ வீரர்களின் மீதான அழுத்தத்தை குறைக்கும். எனவே இந்த டி20 உலகக்கோப்பை முடிந்ததும் இந்திய அணிக்குள் நிறைய இளம் வீரர்கள் வருவதை நான் பார்க்க விரும்புகிறேன். அவர்களை வைத்து அடுத்த உலகக்கோப்பைக்கான டி20 அணியை உருவாக்க வேண்டும்." என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com