நேற்று பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் விராட் கோலி டி20 வரலாற்றில் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்திருக்கிறார். மேலும் ஃபீல்டிங், பேட்டிங், கேட்ச்சிங் என அனைத்திலும் இறங்கி விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமானார்.
ஐபிஎல் தொடரின் 17 வது சீசனின் 6 வது லீக் தொடரின் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பவுலிங் செய்தது. பஞ்சாப் அணியிலிருந்து களமிறங்கிய தவன் 45 ரன்களும், பிரப்சிம்ரன் 25 ரன்களும், சாம் கரன் 23 ரன்களும், சாம் ஜிதேஷ் ஷர்மா 27 ரன்களும் எடுத்தனர். இதில் தவன் மட்டுமே 30 ரன்களுக்கு மேல் எடுத்தார். ஆகையால் பஞ்சாப் அணியின் முழு ஸ்கோர் 176 ஆக அமைந்தது.
RCB அணி 177 ரன்கள் என்ற இலக்கில் இறங்கியது. முதலில் விராட் கோலி 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். அவருக்கு அடுத்து வந்த அனைவருமே சில ரன் ஸ்கோரிலேயே அவுட் ஆகி வெளியேறினார்கள். இதனால் பெங்களூர் அணி இலக்கை அடையுமா என்ற சந்தேகத்தில் இருக்கும்போதுதான் கடைசியாக களமிறங்கிய இரு வீரர்கள் Game Changerகளாக மாறினார்கள். ஆம்! தினேஷ் கார்திக் வரிசையாக சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிஸ் அடித்து வெறும் 10 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். அதேபோல் லாம்ரோர் 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவருமே அணியின் வெற்றிக்கு காரணமாகினர்.
விராட் கோலி அணியை வேகமாக வெற்றி நோக்கிக் கொண்டுச் சென்றார். ஆனால் அதன்பின்னர் சரிவை சந்தித்த அணியை தூக்கி நிமித்தியது தினேஷ் கார்த்திக் மற்றும் லாம்ரோர் ஆகியோர்தான்.
ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த மூவரில் ஒருவர் விராட் கோலி. இவர் பேட்டிங்கில் மட்டுமல்ல ஃபீல்டிங்கில் பவுண்டரி அருகே நின்றுப் பல பவுண்டரீஸ்களை தடுத்து ஸ்கோர் அதிகமாகாமல் தடுத்தார். அதேபோல் கேட்ச்களும் அதிகம் பிடித்து டி20 போட்டிகளில் அதிகம் கேட்ச் பிடித்த வீரர் சுரேஷ் ரெய்னாவின் பல நாள் சாதனையை முறியடித்தார். ஆம்! விராட்டின் நேற்றைய ஆட்டத்தையும் சேர்த்து மொத்தம் 173 கேட்ச்களைப் பிடித்திருக்கிறார். ரெய்னா 172 கேட்ச்கள். மூன்றாவது ரோஹித் 167 கேட்ச்களைப் பிடித்திருக்கிறார்.
மேலும் விராட் கோலி டி20 போட்டிகளில் 100 வதாக நேற்று 50 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனைப் படைத்தார்.
இதனையடுத்து பெங்களூர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.