IPL
IPL

IPL ஆட்டமா? அதிரடி ஆட்டமா?

நின்று, நிதானமாக ஆடுவதற்கான களம் , ஐ பி எல் போட்டி ஆட்டங்கள் கிடையாது.
எதிர்பார்ப்பே, முதல் பந்திலிருந்து கடைசி பந்து வரை, ரன்கள் வந்துகொண்டே இருக்க வேண்டும். அத்தகைய நிலைக்கே ஒவ்வொரு ஐ பி எல் மேட்ச்சும் தள்ளப் படுகின்றன. ரசிகர்கள் மேட்சை என்ஜாய் செய்ய வேண்டும் என்றால் தேவை விறுவிறுப்பு மற்றும் பரபரப்பு. அதற்கு ஸ்கோர் போர்ட்டில் முதலில் ஆடும் அணி, அதிகமான ரன்களை குவித்துக் காட்டவேண்டும். அப்பொழுதுதான் இரண்டாவது ஆடும் அணி, அத்தகைய அதிக ஸ்கோரை எட்டிப் பிடிக்கும் சூழலுக்குத் தள்ளப் படுவார்கள். குறிப்பிட்ட ஓவர்களுக்குள், அத்தகைய அதிக ரன்கள் அடைய, துரத்தும் அணி வீரர்கள் வேகத்தைக் கூட்ட முற்பட வேண்டுவது கட்டாயம் ஆகின்றது. அது மட்டும் அல்லாமல், வெற்றி இலக்கை அடைய ரன்கள் படு வேகத்துடன் எடுப்பத்துடன், விக்கெட்டுக்களைத் தக்க வைத்துக்கொள்வதும் அத்தியாவசியமாகின்றது. சவால்கள் எக்கச்சக்கம்!
இவ்வளவு கடமைகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டிய அவசியம் வேறு! அத்தகைய நிலைமையில், கடைசி ஓவர்களை நெருங்கும் சமயத்தில், கொதிநிலை சூழ்நிலையில் இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதே இல்லை.

அதிரடி ஆட்டம், இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாதாகி விட்டது, துவக்கம் முதலே. எப்படியாவது, ஒவ்வொரு பந்தும் அதிக பட்ச ரன்களைப் பெற்று தர வேண்டும், என்ற ஒரே குறிக்கோளுடன் பெரும்பாலான வீரர்கள் ஆடுகிறார்கள், என்றால் மிகையாகாது.

இதையும் படியுங்கள்:
PBKS Vs GT: மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற குஜராத் அணி… !
IPL

அதே சமயம் அதிரடி ஆட்டம் ஆடும் வீரர்கள், அணியில் ஆடும் 11ல் எப்பொழுதும் இடம் பெற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதை பிராக்டிக்கலாக காண முடிகின்றது. அணியில் இடம் பெறுவதானது, அந்த பேட்ஸ்மன் அதிக பட்ச ரன்களை, குறைந்த எண்ணிக்கை பந்துக்களை எதிர்கொள்வதில்தான் இருக்கிறது என்பதற்கு மறுகருத்து இல்லை. அத்தகையை அதிக ரன்கள், குறைந்த எண்ணிக்கை பந்துக்களில் எடுப்பதற்கு ஒரே தீர்வு அதிரடி ஆட்டம்தான்.  ஆடுவது சரியான அல்லது தவறான முறையா என்ற கேள்விக்கு அர்த்தமற்றதாகிவிட்டது.

இப்பொழுது நடைபெறும்  ஒவ்வொரு ஐ பி எல் மேட்சிலும் போட்டியே, யார் அதிகமான அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றுகிறார் என்பதுதான்.

அதிரடி ஆட்டம், அதிக ரன்களைக் குவிக்க உதவினாலும், ஒரு சில மேட்ச்சுக்களில் சில பவுலர்கள் சிறப்பாக பந்துக்கள் வீசி ரன்கள் எடுப்பதைத் தடுப்பத்தோடு, கட்டுப்படுத்துவதோடு சிலவேளைகளில் விக்கெட்டுக்கள் வீழ்த்துவதும் நடைபெறுகின்றது.
ஆனால், அதிக பட்ச மேட்ச்சுகளில் அதிரடி டெக்னிக்கை பின்பற்றி அதிக பட்ச ரன்கள் எடுக்கும் வீரர் / கள், அவர்கள் அணி வெற்றி அடைய உதவுகிறார்கள், என்பது உண்மை. அதிரடி ஆட்டங்களைப் பார்க்க அதிக பட்ச ரசிகர்களும் விரும்புகிறார்கள். நாளுக்குநாள் இத்தகையவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகின்றது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com