இரண்டு வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த ஜாம்பவான்கள் லண்டன் தெருவில் வாக்கிங்! யார் தெரியுமா?

இரண்டு வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த ஜாம்பவான்கள் லண்டன் தெருவில் வாக்கிங்! யார் தெரியுமா?
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள், அதிலும் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த ஜாம்பவான்கள் மற்றொரு பிரபல நாட்டில் ஒன்றாக நடந்து சென்றால் அது எப்படி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் உலகில் இருந்து ஓய்வுபெற்ற பின், சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்துவருகிறார். அவர் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதனால் அவருக்கு பாலோவர்ஸ்களும் அதிகம். ட்விட்டரில் கிட்டத்தட்ட 39 மில்லியன் ஃபாலோவர்களும், இன்ஸ்டாகிராமில் 41 மில்லியன் ஃபாலோவர்களும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று தனது சமூகவலைதள பக்கத்தில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாராவும், சச்சின் டெண்டுல்கரும் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், லண்டன் தெரு வீதியில் இருவரும் காஷுவலாக வாக்கிங் சென்றுள்ளனர்.

அச்சமயம், அங்கு உள்ளூர் மக்களுக்கு அவர்களை அடையாளம் தெரியவில்லை.

இதனால் இருவரும் பிரபலம் என்ற தோரணை எதுவும் இல்லாமல் சகமனிதர்களைப் போல இயல்பாக தெரு வீதியில் வாக்கிங் சென்றுள்ளனர். இது சம்பந்தமான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com