ட்ராபி வெல்வது இருக்கட்டும்… முதலில் பாகிஸ்தான் வருவீங்களா? - இந்திய அணியிடம் கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

Indian Team
Indian Team

சாம்பியன்ஸ் ட்ராபிதான் அடுத்த இலக்கு என்று பிசிசிஐ செயலாளர் கூறிய நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஒருவர் முதலில் இந்திய அணி பாகிஸ்தான் வருமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்ற ஆண்டு ஐசிசி 50 ஓவர் தொடரில் இந்திய அணி ஆரம்பத்திலிருந்து தோல்வியடையாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. இதனால், ஒட்டுமொத்த இந்தியாவும் மனதளவில் நொறுங்கியது. இந்த இழப்பை டி20 உலகக்கோப்பை போட்டியில் சரிகட்ட வேண்டுமென்று இந்திய அணி தொடக்கத்திலிருந்து முயற்சித்து வந்தது.

அதன்படி இந்திய அணி தொடரின் தொடக்கத்திலிருந்து ஒரு தோல்விக்கூட சந்திக்காமல் இறுதிவரை வந்து, இறுதிப்போட்டியிலும் வென்று, கோப்பையை தன் வசமாக்கியது. அடுத்த ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஆகியவை நடக்கவுள்ளது. இந்த இரு ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி கடந்த முறை தோல்வியடைந்திருந்தது.

கடைசியாக 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்பட்டது. அதன் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போது, பாகிஸ்தான் அணி வென்று சாதனை படைத்தது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடரில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளன. ஆனால் பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் 2008ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி ஒருமுறை கூட பாகிஸ்தானுக்கு பயணிக்கவில்லை. ஐசிசி தொடர்களில் மட்டும் இரு அணிகளும் மோதி வருகின்றன.

கடந்த முறை பாகிஸ்தானில் நடக்கவிருந்த ஆசியக் கோப்பை பிசிசிஐயின் தலையீட்டால் இலங்கையில் சில போட்டிகள் நடைபெற்றது. அதனைப் போல் இந்த தொடரை மாற்ற வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.

இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணியின் அடுத்த இலக்கு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தான் என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் பேசுகையில், டி20 உலகக்கோப்பை வெற்றியால், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணிக்கும் என்று ஜெய் ஷா சிக்னல் கொடுத்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் எனக்கு தெரிந்து ஜெய் ஷா எந்த சிக்னலையும் கொடுக்கவில்லை. அவரிடம் இருந்து பாசிட்டிவ் சிக்னல் கொடுக்கப்பட்டாலும், எனக்கு எந்த ஆர்வமும் வராது.

இதையும் படியுங்கள்:
விராட் கோலி தகுதியற்றவர் – முன்னாள் வீரர் காட்டம்!
Indian Team

அது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பணியல்ல. அது ஐசிசியின் பணியாகும். இந்திய அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வந்தால், நிச்சயம் வரவேற்போம். ஒருவேளை வரவில்லை என்றால், ஐசிசி தான் நடவடிக்கை எடுக்கும். இதன் மூலமாக ஐசிசி யாருக்கு சாதகமாக இருக்கிறது, எவ்வளவு நடுநிலையுடன் உள்ளது என்பதும் தெரிந்துவிடும். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணிக்க தயாராக இருக்கிறதா?" என்று பேசியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com