"SA20 இல் விளையாடினாலும் இங்கிலாந்து அணிக்கே முன்னுரிமை" - லிவிங்ஸ்டோன்!

Liam Livingstone
Liam Livingstone

இதர அணிக்காக அர்ப்பணிப்புடன் விளையாடினாலும், இங்கிலாந்து அணிக்குத்தான் என் முன்னுரிமை என்கிறார் அந்த நாட்டு அணியின் ஆல்-ரவுண்டரான லியம் லிவிங்ஸ்டோன். தென்னாப்பிரிக்கா டி20 போட்டிக்காக எம்.ஐ. கேப்டவுன் அணிக்காக விளையாடுகிறார் லிவிங்ஸ்டோன்.

எம்.ஐ. கேப்டவுன் அணியில் லிவிங்ஸ்டோன் தவிர, தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் கிரோன் போலார்டு ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

வேறு ஒரு அணிக்காக விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுப்பீர்களா அல்லது உங்கள் நாட்டு அணிக்கு முன்னுரிமை கொடுப்பீர்களா என்பது பற்றி அவரிடம் கருத்து கேட்டபோது இங்கிலாந்து அணிக்கே முன்னுரிமை கொடுப்பேன் என்றார் லிவிங்ஸ்டோன். ஐ.பி.எல். போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சார்பாகவும், பிர்மிங்ஹாம் போனிக்ஸ், பெர்த் ஸ்காட்சர்ஸ் லீக் (பிபிஎல்) மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக்போட்டியில் பெஷாவர் ஜல்மி அணிக்காவும் லிவிங்ஸ்டோன் விளையாடியுள்ளார்.

தனியார் அணிகளுக்காக நான் விளையாடினாலும், என்னை பொருத்தவரை இங்கிலாந்து அணிக்குத்தான் முன்னுரிமை. ஒரு ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் போட்டி அட்டவணையைப் பார்ப்போம். அதில் இடைவெளி இருந்து வேறு அணிகளுக்கு வாய்ப்பு இருந்தால் விளையாடுவோம் என்றார் லிவிங்ஸ்டோன்.

2023 உலக கோப்பை ஒருநாள் போட்டியில் நாக்அவுட் போட்டியில் தகுதிபெற இங்கிலாந்து அணி தவறிவிட்டது. அந்த அணியில் லிவிங்ஸ்டோன் இடம்பெற்றிருந்தார். 2019 இல் கோப்பை வென்றது இங்கிலாந்து அணி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
மற்றவர்களுடன் நம் குழந்தைகளை ஒப்பிடுவதும், போட்டி போடச் செய்வதும் சரியா?
Liam Livingstone

சர்வேதச போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டாலோ அல்லது எங்களுக்கு ஓய்வு தேவைப்பட்டாலோ நாங்கள் இதர அணிகளுக்காக விளையாடுவதை தவிர்த்து விடுவோம். இங்கிலாந்து அட்டவணை தயாரான உடனேயே எங்கு விளையாடுவது, எப்படி விளையாடுவது என்பதை தீர்மானித்து விடுவோம் என்றார் லிவிங்ஸ்டோன்.

தென்னாப்பிரிக்க டி20 போட்டிகள் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்குகிறது. முதல்போட்டியில் சன்ரைஸர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. லிவிங்ஸ்டோன் இடம்பெற்றுள்ள எம்.ஐ. கேப்டவுன் அணி, 11 ஆம் தேதி டர்பன் சூப்பர் ஜியன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com