மெஸ்ஸி Vs ரொனால்டோ: மீண்டும் நேருக்கு நேர் மோதல்!

Messi Vs Ronaldo.
Messi Vs Ronaldo.
Published on

கால்பந்து போட்டியில் பரம எதிரிகளான லயோனல் மெஸ்ஸியும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் நேருக்கு நேர் ஒரு போட்டியில் மோத உள்ளனர். இன்டர் மியாமி அடுத்த ஆண்டு ரியாத் சீசன் கோப்பை போட்டியில் அல்-நாஸரை எதிர்கொள்வதை உறுதி செய்துள்ளது.

இந்த போட்டி மூன்று அணிகள் கொண்ட ரியாத் சீசன் கோப்பையின் ஒரு பகுதியாகும். இது இன்டர் மியாமிக்கான முதல் சர்வதேச சுற்றுப்பயணத்தை குறிக்கிறது. எல் சால்வடார் மற்றும் ஹாங்காங்கிற்கும் பயணம் மேற்கொள்கிறது.

இந்த அணி முதலில் ரியாத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி கிங்டம் அரினா ஆடுகளத்தில் அல்-ஹிலால் அணியை எதிர்கொள்கிறது. அதே இடத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி இன்டர்மியாமி, அல்நாஸர் அணியை சந்திக்கிறது. அந்த போட்டியில்தான் லயோனல் மெஸ்ஸியும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

கடந்த சீசனில் ரொனால்டோ ப்ரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியில் இருந்து அல் நாஸருக்கு மாறினார். இதுவரை 41 போட்டிகளில் பங்கேற்ற ரொனால்டோ 34 கோல்கள் போட்டுள்ளார். 12 முறை மற்றவர்கள் கோல் அடிக்க உதவியுள்ளார். இந்த சீசனில் ரொனால்டோ அல்நாஸர் அணிக்காக 22 போட்டிகளில் பங்கேற்று 20 கோல்கள் போட்டுள்ளார். மேலும் 10 முறை மற்றவர்கள் கோல்போட உதவியுள்ளார்.

மெஸ்ஸியை பொறுத்தவரை அவர், இந்த ஆண்டு பாரிஸ் செயின்-ஜெர்மைன் அணியிலிருந்து இன்டர் மியாமிக்கு மாறினார். ஆர்ஜென்டீனா சூப்பர் ஸ்டாரான மெஸ்ஸி 14 போட்டிகளில் 11 கோல்கள் அடித்துள்ளார். இன்டர் மியாமி முதல் முறையாக கோப்பை வெல்லவும் உதவினார்.

மெஸ்ஸியின் வருகை லீக் ஆட்டத்தில் எழுச்சியை ஏற்படுத்தியது. ஜெர்சி விற்பனையும், ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆடுகளத்திற்கு அப்பாலும் அவரது செல்வாக்கு அதிகரித்தது.

இதையும் படியுங்கள்:
மனிதனால் அழிக்கப்பட்ட டால்ஃபின் இனம் பற்றி தெரியுமா?
Messi Vs Ronaldo.

மெஸ்ஸி, ரொனால்டோ இருவரும் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 13 பலூன் டீ ஓர் விருதுகளை வென்றுள்ளனர். இதில் மெஸ்ஸி 8 முறையும் ரொனால்டோ 5 முறையும் விருது வென்றுள்ளனர்.

மெஸ்ஸி, ரொனால்டோ ஆகிய வீர்ர்களுமே இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இந்த முறையும் அவர்கள் இருவரும் நேரில் மோதுவதைக் காண உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்று இன்டர் மியாமியின் சேவியர் அசன்ஸி தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com