நியூஸிலாந்து கிரிக்கெட் வீர்ர் மீதான ஆயுள் தடை நீக்கம்!

Lou Vincent.
Lou Vincent.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வீர்ர் லூ வின்சென்ட் மீது கடந்த 2014 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை இங்கலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது.

செய்த தவருக்கு வருத்தம் தெரிவிப்பது மற்றும் திருத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆதாரங்களை பரிசீலித்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் ஒழுங்கு முறை ஆணையம், இந்த முடிவை அறிவித்துள்ளது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் “மேட்ச் பிக்ஸிங்கில்” ஈடுபட்டதான குற்றச்சாட்டின் பேரில் லூ வின்சென்ட் மீது 11 முறை ஆயுள் தடை விதிக்கப்பட்டது. தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளை ஏற்றுக்கொண்டு அவர், கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஓதுங்கியிருந்தார்.

இப்போது அவர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. 45 வயதான வின்சென்ட் கிரிக்கெட் மீதான தடை நீக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். “நான் என் வாழ்நாளில் மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன். அதற்காக நான் வருந்துகிறேன். இனி அதுபோன்ற தவறுகளை செய்யமாட்டேன்” என்று வின்சென்ட் கூறியதாக நியூஸாந்து கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லூ கடைசியாக 2007 ஆம் ஆண்டில் நியூஸிலாந்து அணிக்காக விளையாடினார். கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டதை அடுத்து நியூஸிலாந்தின் வைகாடோ பிராந்தியத்தில் ரக்லான் என்னுமிடத்தில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்துடன் சென்று கிரிக்கெட் போட்டிகளை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். இப்போது மீண்டும் கிரிக்கெட் உலகிற்கு திரும்பி போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருக்கிறார். எனக்கு மீண்டும் கிரிக்கெட் விளையாட வாய்ப்புக் கிடைத்த வகையில் நான் ஒரு அதிர்ஷடசாலி என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்:
ஒரு கிரிக்கெட் மேட்சின் ஒளிபரப்பிற்குப் பின்னால் இயங்கும் கேமராக்களின் மாயாஜாலம்!
Lou Vincent.

மேட்ச் பிக்ஸிங்கால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அனைத்து விளையாட்டுகளிலும் வீர்ர்களுக்கு கற்பிப்பதில் வின்சென்ட் முக்கிய பங்காற்றியதாக என்.இஸட்.பி.ஏ. அமைப்பின் சி.இ.ஓ. ஹீத் மில்ஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

லூ வின்சென்டுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் கடுமையாக இருந்தன. மேலும் அவர், தனது தவறுகளை ஒப்புக்கொள்வதிலும், தன்னை திருத்தித் கொள்வதிலும் மிகுந்த அக்கறை காட்டினார். மேட்ச் பிக்சிங்குக்கு எதிரான போராட்டத்தில் அவரது பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது என்றார் ஹீத் மில்ஸ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com