IPL 2026: லக்னோவை வீழ்த்தி த்ரில் வெற்றி: பிளே-ஆப் வாய்ப்பை தக்கவைத்தது பஞ்சாப் கிங்ஸ்..!

லக்னோவில் இன்று நடைபெற்ற 68-வது லீக் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அதிரடி வெற்றியை பதிவு செய்தது.
Punjab Kings team
Punjab Kings teamimage credit-cclcricket.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு(பிளே-ஆப்) முன்னேறி விட்டன.

மீதமுள்ள ஒரு இடத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 3 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில் லக்னோவில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி 13 ஆட்டங்கள் ஆடியதில் 7 வெற்றி, ஒரு ஆட்டம் முடிவில்லை, 6 தோல்வியுடன் 13 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில்(10-வது) தவிக்கிறது. இந்த அணி ஏற்கனவே பிளே-ஆப் வாய்ப்பை பறிகொடுத்து விட்டது.

இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 4-ல் பஞ்சாப்பும், 3-ல் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி இறுதியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை எட்டியது.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்தது.

logo
Kalki Online
kalkionline.com