MI Vs RR: தொடர்ந்து மூன்றாவது முறையாக ராஜஸ்தான் அணி வெற்றி!

Rajasthan royals
Rajasthan royals

ஐபிஎல் போட்டியின் 17வது சீசனில் நேற்று மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நேற்று நடைபெற்ற போட்டி மும்பை அணியின் சொந்த மண்ணில் நடைபெற்றதால் கண்டிப்பாக மும்பை அணியே வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கைத் தேர்வு செய்தார். மும்பை அணி சார்பாக ஓப்பனராகக் களமிறங்கிய ரோஹித் ஷர்மா முதல் பந்திலேயே டக் அவுட்டானார். அதன்பின்னர் களமிறங்கியவர்களும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் மும்பை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 1 ரன் மட்டுமே எடுத்து மோசமான நிலையில் இருந்தது. 

நமன் திர் மற்றும் டேவால்ட் ப்ரேவிஸ் ஆகியோரும் டக் அவுட் ஆகினர். இஷன் கிஷன் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால் மும்பை அணி 20 ரன்கள் எடுப்பதற்குள்ளேயே நான்கு விக்கெட்டுகளை இழந்துத் தவித்தது. இதன்பிறகு மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தனி ஆளாகப் போராடி கௌரவமான இலக்கைக் கொடுக்க முயற்சி செய்தார். இந்தநிலையில் அவர் 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 13 ரன்களில் வெளியேறினார். கேப்டன் சஞ்சுவும் 13 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மும்பை அணி போலவே முதலில் ராஜஸ்தான் அணியும் 48 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. ஆகையால் மும்பை அணி மேல் எதிர்பார்ப்பு கூடியது.

இதையும் படியுங்கள்:
“கேப்டன்ஸி மாறும்போது அணியை இயல்பாக கொண்டு செல்வது சாதாரணமில்லை” – CSK கோச் பிளெமிங்!
Rajasthan royals

ஆனால் ரியான் பராக் முற்றிலுமாக ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதிரடி ஆட்டத்தில் இறங்கிய ரியான் ஐந்து பவுண்டரீஸ் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடித்து 39 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். இந்தத் தொடரில் மட்டும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ரியான் அரைசதம் அடித்தார். ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல் மும்பை அணி தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

மும்பை அணியைப் பொறுத்தவரை ஆகாஷ் மதுவால் மட்டுமே 4 ஓவர் பந்துவீசி 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதுமட்டுமே மும்பை அணிக்கு ஆறுதலாக இருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com