#BREAKING ஐபிஎல் 2026: ராஜஸ்தான் அசத்தல் வெற்றி: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்..!

லக்னோவில் இன்று நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி ராஜஸ்தான் அணி 5-வது வெற்றியைப் பதிவு செய்தது.
Rajasthan Royals team
Rajasthan Royals teamimage credit-news18.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

லக்னோவில் இன்று நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது.

நடப்பு ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி விளையாடிய 6 போட்டிகளில் 2-ல் வெற்றியும், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி விளையாடிய 6 போட்டிகளில் 4-ல் வெற்றியும் பெற்றுள்ளது.

மொத்தத்தில் வெற்றிப்பாதைக்கு திரும்ப இரு அணிகளும் மல்லுகட்டும் என்பதல் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்குநேர் மோதியதில் 4-ல் ராஜஸ்தானும், 2-ல் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸில் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய லக்னோ அணி ஆரம்பம் முதலே கடுமையாக போராடிய போதிலும் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இறுதியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் நடப்பு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 5-வது வெற்றியை ருசித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com