மலேசிய ஓபன் பேட்மின்டன்: முதல் சுற்றிலேயே லக்க்ஷயா சென் வெளியேற்றம்!

Lakshya Sen.
Lakshya Sen.
Published on

இளம் பேட்மின்டன் வீர்ர் லக்க்ஷயா சென்னுக்கு 20024 சீசன் தொடக்கமே ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இருந்தது. மலேசிய ஓபன் சூப்பர் 1000 பேட்மின்டன் போட்டியின் ஒற்றையர் ஆட்டத்தில் அவர் முதல் சுற்றிலேயே சாதாரண சீன வீர்ர் வெங் ஹோங் யாங்கிடம் 15-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

முன்னதாக முன்னிலை ஆட்டக்காரரான இந்தியாவின் பிரணாய் ராயும் முதல் சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

 23 வயதான லக்க்ஷயா இந்த சீசனில் ஐந்தாவது முறையாக முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளார். அவர் தனது நிலையை தக்கவைத்துக் கொள்ள போராடி வருகிறார். லகின் 16 ஆம் நிலை ஆட்டக்காரரான லக்க்ஷயா, கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடதக்கது.

முதல் சுற்றில் கீழ்நிலை ஆட்டக்காரரான வெங் ஹோங் யாங்கை சமாளிக்க லக்க்ஷயா கடுமையாக போராட வேண்டியிருந்தது. சீன வீர்ருக்கு நிர்பந்தங்கள் ஏற்படுத்த வாய்ப்பு இருந்தும் அதை தவறவிட்டுவிட்டார். இரண்டாவது செட்டில் முதலில் 7-11 என பின்தங்கியிருந்த லக்க்ஷயா பின்னர் முன்னேற வாய்ப்பிருந்தும் வெற்றியை சீன வீர்ருக்கு கொடுத்துவிட்டார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால், லக்க்ஷயா தன்னை இன்னும் நன்றாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உலக முதலீட்டாளர் மாநாடு: பொருளாதார ரீதியாக தமிழ்நாடு அடையப் போகும் வளர்ச்சி என்ன தெரியுமா?
Lakshya Sen.

இரட்டையர் போட்டியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி இந்தோனேசியிவின் முகமது ஷோஹிபுல் பிக்ரி மற்றும் பகஸ் மவுலானா ஜோடியை 21-18, 21-19 என வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

இதனிடையே உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்ற வீர்ரான ஹெச்.எஸ்.பிரணாய், மலேசிய ஓபன் சூப்பர் 1000 போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டென்மார்க் வீர்ர் ஆண்டர் அன்டோன்சென்னிடம் 14-21, 11-21 என் செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். 43 நிமிடங்களில் போட்டி முடிந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com