நான் நட்சத்திர வீரராக ஆகாததற்கு தோனித்தான் காரணம் - மனோஜ் திவாரி!

Manoj tiwari
Manoj tiwari

மனோஜ் திவாரி தனது கடைசி ரஞ்சி ட்ராஃபி விளையாட்டை முடித்த பிறகு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து தான் ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து ஓய்வு அறிவிப்பின்போது தன்னை இந்திய அணியிலிருந்து தோனி விலக்கியது ஏன்? என்றும் அதனால்தான் தான் ஒரு நட்சத்திர வீரராக ஆக முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

மனோஜ் திவாரி இந்திய அணிக்காக இதுவரை 12 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 287 ரன்கள் அடித்திருக்கிறார். 2011ம் ஆண்டு மனோஜ் திவாரி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தினார். அதேபோல் மனோஜ் இந்தியாவிற்காக மூன்று டி20 போட்டிகளில் தோனி தலைமையில் விளையாடினார்.

இதனையடுத்து ரஞ்சி ட்ராஃபி தொடரில் விளையாடி முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் திவாரி, “2011ம் ஆண்டு நான் சதம் அடித்த பிறகும் கூட தோனி என்னை அணியில் இருந்து நீக்கினார். அது ஏன் என்று அவரிடம் கேட்க எனக்கும் ஆசைத்தான். இல்லையெனில் நானும் விராட் கோலி மற்றும் ரோகித் போல ஒரு பெரிய நட்சத்திர வீரராக மாறியிருப்பேன். அந்த அளவுக்கு என்னிடம் திறமையும் இருந்தது. ஆனால் அப்படி நடக்கவில்லை.

பல வீரர்களுக்கு இப்போது வாய்ப்பு கிடைத்து கிரிக்கெட்டில் ஜொலித்து வருகிறார்கள். சில இளம் வீரர்கள் ஐபிஎல் மட்டுமே விளையாடினால் போதும் என்று  நினைக்கின்றனர். அது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. ஐபிஎல் தொடரில் சிறந்து விளங்கும் சில வீரர்கள் ரஞ்சியில் விளையாடுவதில்லை. இதனால் எதற்கு இந்த ரஞ்சி, பேசாமல் அதை நீக்கிவிடுங்கள் என்று கூறியது பிசிசிஐ செயலாளருக்கு அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.

அதனால்தான் வீரர்கள் கட்டாயம் ரஞ்சியில் விளையாட வேண்டும் என்று அவர்  கூறினார். ஆனால் இப்போது பிசிசிஐ குறித்து ஏதேனும் பேசினால் எனக்குத் தடை விதிக்க வாய்ப்பு இருக்கிறது. பிசிசிஐ முன்பு போல் விளையாட்டு நிபுணர்களால் நிர்வகிக்கப்பட்டவில்லை. அரசியல் ஆதிக்கம் தான் பிசிசிஐயில் நிரம்பி இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
பார்முலா 1 கார் பந்தயங்களில் அணியப்படும் ஹெல்மெட்டும் நாம் அணியும் ஹெல்மெட்டும் ஒண்ணா?
Manoj tiwari

நானும் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் தான். அதேபோல் நான் ஒரு விளையாட்டு வீரனும் கூட. ஆகையால் நான் எந்த மோதலிலும் ஈடுபட விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை ரஞ்சி ட்ராஃபிக்கு இளம் வீரர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதேபோல் ரஞ்சி ட்ராஃபி மட்டுமே விளையாடும் வீரர்களுக்கு ஊதியத்தை உயர்த்தித் தர வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com