7 நாட்கள்.. 2376 ரன்கள்.. 9 சதங்கள்! – கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு போட்டி இனி நடக்கவே முடியாது..!

highest scoring first-class match ever
highest scoring first-class match everImagee source:Crictracker
Published on

77 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு முதல் தர (First Class) கிரிக்கெட் போட்டியில், பந்துவீச்சாளர்கள் திணறத் திணற பேட்ஸ்மேன்கள் ரன் மழையைப் பொழிந்தனர்.ஒரு பக்கம் இரண்டு அணி வீரர்களும் சதங்கள் குவிக்க, பவுலர்கள் தங்கள் பங்கிற்கு ரன்களை சதங்கள் கணக்கில் விட்டுக் கொடுத்தனர்.

இது சாதாரணப் போட்டியல்ல; 1949-ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பைத் தொடரின் முக்கியமான அரையிறுதி ஆட்டம். புனேயில் மார்ச் 5 அன்று தொடங்கி, மார்ச் 11, 1949 வரை என மொத்தம் ஏழு நாட்கள் இந்த ஆட்டம் நடைபெற்றது.மொத்தம் 2376 ரன்கள் கண்டது இந்த ஆட்டம்.

டாஸ் வென்ற பம்பாய் அணி பேட்டிங் ஆட தேர்வு செய்தது,மஹாராஷ்டிரா அணி பவுலிங் செய்தனர்.இந்த ஒரே ஆட்டத்தில் மட்டும் மொத்தம் 2,376 ரன்கள் குவிக்கப்பட்டன. ஒன்பது சதங்கள் அடிக்கப்பட்டன, அதில் ஒரு இரட்டைச் சதமும் அடங்கும். துரதிர்ஷ்டவசமாக இரண்டு வீரர்கள் சதத்தைத் தவறவிட்டனர். மறுபுறம், பந்துவீச்சாளர்கள் 10 முறை 100-க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்தனர்.

இவ்வளவு இருந்தும் முடிவு எட்டியது ஒரு அணிக்கு சாதகமாக.இரண்டு அணிகளிலும் அந்த கால கட்டத்தின் சிறந்த வீரர்கள் பங்கு கொண்டனர்.

முதலில் விளையாடிய பம்பாய் அணி 651 ரன்கள் குவித்தனர்.விக்கெட் கீப்பர் ஒப்பனிங் பேட்ஸ்மேன் மாதவ் மந்திரி 200 ரன்கள் எடுத்தார்.

உதய் மர்சென்ட் 143 ரன்களும், டாட்டு பாட்கர் 131 ரன்களும் எடுக்க, பம்பாய் அணி முதல் இன்னிங்ஸில் 651 ரன்கள் குவித்தது.

அடுத்து ஆடிய மஹாராஷ்டிரா அணி, தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தாலும், மனோகர் டாட்டர் (143) மற்றும் மதுசுதன் ரிகே (133) ஜோடி 258 ரன்கள் சேர்த்து அணியைக் காத்தது. முடிவில் மஹாராஷ்டிரா அணி 407 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.மஹாராஷ்டிரா அணியின் துவக்க பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. விரைவில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தனர் .

பம்பாயின் வீரர் கேகி தாராப்பூர் 64 ஓவர்கள் (21 மெய்டன் ஒவர்கள்) வீசி 119 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.142 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுக்கள் எடுத்தார் டாட்டு பாட்கர்.

இரண்டாவது இன்னிங்ஸ்:

இரண்டாவது இனிங்க்சிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப் படுத்தினர் பம்பாய் வீரர்கள்.இரண்டாவது இன்னிங்சிலும் தொடர்ந்து இருவரும் சதங்கள் எடுத்து அசத்தினர்.உதய் மர்சென்ட் (156) மற்றும் டாட்டு பாட்கர் (160) மீண்டும் சதமடித்து அசத்தினர்.

முதல் இன்னிங்சில் 650 ரன்களை கடந்த பம்பாய் அணி இரண்டாவது இன்னிங்க்சில் 700 ரன்களை கடந்தது.8 விக்கெடுக்கள் இழப்பிற்கு 714 ரன்களுடன் தங்களுடைய இரண்டாவது இன்னிங்சை டிக்ளர் செய்தனர் பம்பாய் அணியினர்.

மஹாராஷ்டிரா அணி பவுலர்கள் பந்துக்கள் வீசி துவண்டு விட்டனர்.4 விக்கெட்டுக்கள் எடுத்த டாட்டாட்றையா சவுதரி 210 ரன்கள் விட்டுக் கொடுத்தார் தன் பந்து வீச்சில்.

959 வெற்றி பெற வேண்டிய ரன்கள் இலக்குடன் மஹாராஷ்டிரா அணி வீரர்கள் மேட்சின் நான்காவது இன்னிங்சை துவக்கினர்.

அதிக படியான ரன்கள் இலக்காக இருக்கவே பம்பாய் வீரர்கள் சுலபமாக வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் களம் இறங்கினார்கள்.ஆனால் நடந்ததோ எதிர் பாராதது.மஹாராஷ்டிரா அணி வீரர்கள் மிக சிறப்பாக பேட்டிங் ஆட ரன்கள் அதிகரித்து வந்தன.

முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்சிலும் மதுசுதன் ரிகே சதம் எடுத்தார். 100 ரன்கள்.ஷரத் தியோதர் 146 ரன்கள் குவிக்க அந்த அணி நான்காவது இன்னிங்சில் 600 ரன்களை கடந்தது.

பம்பாய் பவுலர்களும், பீல்டர்களும் போராட வேண்டியிருந்தது வெற்றி பெற.

விக்கெட்டுக்கள் எடுத்த பம்பாய் வீரர்கள்

  • டாட்டு பாட்கர் 3 / 178

  • கேகி தாராப்பூர் 3 / 180

  • ஜி ராம்சந்த் 2 / 121

மஹாராஷ்டிரா அணி 604 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக பம்பாய் அணி 354 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

சதங்களை தவற விட்ட வீரர்கள எடுத்த ரன்கள்

  • பம்பாய் அணி கே ரங்கனேகர் 94 ரன்கள்

  • மஹாராஷ்டிரா அணி

  • சாதசிவ் பல்சுலே 97 ரன்கள்

இதையும் படியுங்கள்:
IPL 2026 புது விதிகள்: இனி ஒரு அணி 200 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்..
highest scoring first-class match ever

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com