மருத்துவ குணம் மிக்க ரம்பூட்டான் மற்றும் மங்குஸ்தான்!

மருத்துவ குணம் மிக்க ரம்பூட்டான் மற்றும் மங்குஸ்தான்!
Published on

மிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம் சீசன் துவங்கப் போகிறது அங்கு ரம்பூட்டான் மற்றும் மங்குஸ்தான் பழம் ஏராளமாக கிடைக்கும்  அதன் நன்மைகளை பார்ப்போம்!

ரம்பூட்டான் பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது. இதன் மேற்புறம் முள்ளு முள்ளாக காணப்படும். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் ரம்புட்டானை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ரம்பூட்டான் பழத்தின் தோல் பகுதி வயிற்றுக் கோளாறை சரிசெய்யும்.

ரம்புட்டான் பழத்தில் நீர்ச்சத்தும் அதிகம் இருப்பதால் நாக்கு வறண்டு போவதை தடுக்கும்.

ரம்பூட்டான் பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட் புரதம் ஆகிய சத்துக்கள் உடல் உழைப்புக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. உடல் சீரான வளர்ச்சி பெறுவதற்கு இந்த பழம் முக்கிய பங்காற்றுகிறது.

உடலில் கெட்ட கொழுப்பு சேரவிடாமல் ரம்பூட்டான் பழம் தடுக்கிறது இதனால் மாரடைப்பு அபாயம் குறைகிறது.

ரம்பூட்டான் ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த செய்கிறது. கண் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது.

ரம்புட்டான் பழம் அடிக்கடி சாப்பிடுவதால் தலைமுடி தோல் மற்றும் கை கால் நகங்கள் ஆகியவை பளபளப்புடன் இருக்க உதவி செய்கிறது.

இப்பழத்தில் உள்ள இரும்புத்சத்து உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க உதவுகிறது. எலும்பு மண்டல வளர்ச்சிக்கு உதவக்கூடிய கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் ரம்பூட்டான் பழத்தில் உள்ளது.

மங்குஸ்தான் பழம் மருத்துவ பயன்கள்!

டல் கொழுப்பை உடல் எடையை குறைக்க நினைக்கும் அனைத்து மக்களும் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒரு பழம் மங்குஸ்தான் பழம் இந்த மங்குஸ்தான் பழத்தை தினம் ஒரு முறை மூன்று வாரங்களுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

இதயம் ஆரோக்கியமாக இருக்க மங்குஸ்தான் பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும். இதில் உள்ள ஒமேகா 6 வேதிப்பொருட்கள் இதயத்தை வலுப்படுத்தும் சக்தியை கொண்டதாகும்.

நன்மை பயக்கும் கொழுப்புகள் உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்து விட்டால் அதனை கொலஸ்ட்ரால் என்பர். இந்த தேவையற்ற உடற்கொழுப்பு பிரச்சனைகளைப் போக்க மங்குஸ்தான் பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து பொருள் உடலில் இருக்கும் அதிகப்படியாக கொழுப்புகளை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகின்றது.

மங்குஸ்தான் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் காசநோய் என்ற பெரும் நோய் வேகமாக குணமடையும். சான்தொன்ஸ் என்னும் முக்கியமான ஒரு திரவம் பழத்தில் இருக்கிறது. புற்றுநோயை குணப்படுத்தும் அபூர்வ சக்தி நிறைந்த பழம் மங்குஸ்தான்.

நமது உடலின் முக்கிய உறுப்பான கண்களின் பார்வை திறன் தெளிவாக இருக்க  உயிர்சத்து ஏ அஸ்கார்பிக் அமிலம் நிகோடினிக் அமிலம் போன்றவை  மிகவும் முக்கியமாகும். மங்குஸ்தான் பழத்தில் இந்த சத்துக்கள் அதிகம் இருக்கின்றன அதனால் மங்குஸ்தான் பழங்களை தினந்தோறும் அல்லது வாரத்துக்கு இரண்டு முறையாவது சாப்பிடுவது கண் பார்வை திறனை மேம்பட வைக்க உதவும்.

வயது ஆவதாலும் ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தோலில் வறட்சி ஏற்பட்டு தோல் சுருக்கங்களும் வயதான தோற்றமும் ஏற்படும் தோலில் பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமைத் தோற்றத்தை உண்டாக்க மங்குஸ்தான் பழத்தை அதிகம் சாப்பிட வேண்டும்.

மங்குஸ்தான் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. எனவே இந்த மங்குஸ்தான் பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.

மங்குஸ்தான் பழத்தை சுவைத்து சாப்பிட்டுவிட்டு அதன் தோலைக் காய வைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும் வயிற்றுப் புண் வாய்ப்புண் குணமடையும்.

உணவு குழாயில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் கொல்லும். சிறுநீர் நன்றாக வெளியேற்றக் கூடிய சக்தி மங்குஸ்தான் பழத்திற்கு உள்ளது.

கணினியில் வேலை செய்யும் இளைய  தலை முறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சல் உண்டாகும்.

இதனால் சிலர் தலைவலி  கழுத்து வலி  எனஅவதிக்கு உள்ளாவர்கள். இதுபோன்ற வலிகள் இருப்பவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் நீங்கி நரம்புகள் பலம் பெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com