ஆண்களே உஷார்! உஷார்......!

ஆண்களே உஷார்! உஷார்......!

இன்றைய நாகரீக உலகில் காற்று, நீர் போன்றவை மாசடைந்து விட்டன. விளைவிக்கின்ற உணவுப் பொருட்களில், ரசாயனக்கலவையின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால், மனிதக்குலம், அச்சப்படுமளவிற்கு புதிது புதிதாக வியாதிகள் தோன்றுகின்றன. வயது வித்தியாசமின்றி, வியாதிகளோடு இருப்பது கவலையை அளிக்கிறது. இது உலகெங்கிலும் உள்ள நிலை. அதில் புற்றுநோய் என்பது அச்சத்தை விளைவிக்கும் நோயாகும்.

நமது உடலில், 'ப்ரொஸ்டட்' சுரப்பி உள்ளது. இப்போது ஆண்களுக்குப் புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு, இந்த சுரப்பியில் ஏற்படும் பிரச்னைகளே காரணமாகும்.

இந்த சுரப்பியானது, ஆண்களின் இனப்பெருக்கத்திற்கு முக்கியப்பங்காற்றுகிறது. இது சிறுநீர்ப்பைக்குக் கீழே மற்றும் மலக்குடலின் முன் உள்ளது. விந்தணு திரவத்தை உற்பத்தி செய்து விந்தணுக்கள் சரியாகச் செயல் பட வைப்பதே, இந்த சுரப்பியின் முக்கியப் பணியாகும்.

வயது முதிர்ந்த ஆண்களுக்கு மட்டுமல்லாது, இளம் வயதினருக்கும், 'விதைப்பை' புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பு 45 வயதுள்ளவர்களுக்கு அதிகமாகக் காணப்படுகிறது. விதைப்பைப் புற்று நோய் வயதிற்கேற்ப மாறுபடுகிறது. இதன் பொதுவான அறிகுறிகள், எலும்பு வலி, எடை குறைவு, சோர்வு போன்றவையாகும்.

இந்தப் பாதிப்புகள் அதிகரிக்கும்போது, சிறுநீர்கழிப்பதில் பிரச்னைகள் ஏற்படுகிறது. விட்டு விட்டு சிறுநீர்க் கழித்தல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகிறது. இது உடல் முழுவதும் பரவுவதால், நிணநீர் சுரப்பிகளில் வீக்கம் உண்டாகும். மேலும் காலகளிலும் வீக்கம் ஏற்படும்.

ஆரம்பத்திலேயே இந்த நோயைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை அளித்தால், இந்நோயைக் குணப்டுத்தி விடலாம். அதைப்பற்றிய விழிப்புணர்வு, ஆண்களிடையே இல்லாததால், நோயின் பாதிப்பு அதிகமாகி பல தொல்லை தரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.

விதைப்பை புற்று நோய்க்கான முக்கிய அறிகுறிகள்;

#அடிக்கடி சிறுநீர் கழிப்பது.

#சிறுநீர் கழிக்கும்போது ஆண்குறியில் எரிச்சல்.

#முதுகெலும்பு மற்றும் எலும்புகளில் வலி.

#எலும்பு முறிவு மற்றும் சிறுநீரக செயலிழப்பு.

#சிறுநீர் அல்லது விந்துவுடன் இரத்தம் வருவது.

#மலக்குடல் அழுத்தம்.

#இடுப்பு அல்லது மலக்குடல் பகுதியில் வலி.

போன்றவைகளே, ப்ராஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகளாகும்.

சிலவகைப் புற்றுநோய்கள், ப்ரொஸ்டட் சுரப்பியின் வெளிப்புறத்தில் தோன்றுவதால் அறிகுறியற்றதாக இருக்கலாம். இந்த நோய் தொற்றுநோய் அல்ல என்பதை உணரவும்.

மேற்கூறிய அறிகுறிகள் தோன்றினால், தாமதப்படுத்தாமல், உடனடியாக, மருத்துவரை அணுக வேண்டும். தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு, உரிய சிகிச்சையைப் பெற்று நலமுடன் வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com