ஐபிஎல் 2026: லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 47வது லீக் போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.
MI vs LSG
MI vs LSG image credit-cricketcountry.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் 47வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை காண்கின்றன.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 7 தோல்வி என புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

லக்னோ அணி 8 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 5 தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்களை குவித்தது.

இதனை தொடர்ந்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய மும்பை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

logo
Kalki Online
kalkionline.com