MI Vs LSG: இரு பலம் வாய்ந்த அணிகள் இன்று மோதல்!

K.L.Rahul and Rohit Sharma
MI Vs LSG
Published on

IPL கிரிக்கெட் தொடரின் 48வது லீக் போட்டி இன்று மும்பை மற்றும் லக்னோ அணிகள் இடையே நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஐந்து போட்டிகளில் ஆபார வெற்றிபெற்ற லக்னோ அணியும், ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சேம்பியன் வென்ற மும்பை அணியும் மோதவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

மும்பை அணி இந்த ஐபிஎல் தொடரில், இதுவரை நடந்த 9 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று, 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி  9வது இடத்தில் உள்ளது. அதேபோல் லக்னோ அணி 9 போட்டிகளில் விளையாடி, 5 போட்டிகளில் வென்று, 4 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. மும்பை அணிக்கு இன்னும் ஐந்து போட்டிகளே உள்ளன. இந்த ஐந்து போட்டிகளிலும் ஒரு போட்டி கூட விடாமல், அனைத்திலும் வெற்றிபெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற முடியும். ஆகையால், மும்பை அணி வாழ்வா-சாவா என்ற நெருக்கடியில்தான் உள்ளது.

ஆனால், லக்னோ அணி எந்த அழுத்தமும் இல்லாமல் விளையாடலாம். லக்னோ அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில ஆட்டங்களில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. அவர் இன்று முழு உடல் தகுதியுடன் லக்னோ அணியில் களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 156 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேலாக பந்து வீசி எதிரணியை அச்சுறுத்தும் மயங்க் யாதவின் வருகை, அந்த அணியின் பந்து வீச்சை மேலும் பலப்படுத்தும் என்பதால், லக்னோ அணியின் ஆட்டம் வெறித்தனமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
T20 Worldcup: நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் அறிவிப்பு!
K.L.Rahul and Rohit Sharma

அதேபோல், மும்பை அணியும் கடந்த சில போட்டிகளில் பழைய ஃபார்முக்கு திரும்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால், இன்றைய ஆட்டத்தில் களமிறங்கப்போகும் மும்பை அணி லக்னோ அணியை எதிர்க்கும் சமபலம் கொண்டதாக இருக்கும் என்றே ரசிகர்கள் கணிக்கின்றனர்.

அந்தவகையில், இன்று 7:30 மணிக்கும் ஆரம்பிக்கும் மும்பை அணி, லக்னோ அணி போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பது மட்டும் உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com