T20 Worldcup: நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் அறிவிப்பு!

T20 Worldcup NZ team
NZ Team
Published on

இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் 4 சிஎஸ்கே வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும் 20 அணிகளில் மிகத்தரமான வீரர்களைக் கொண்ட அணிகளில் ஒன்றாக நியூசிலாந்து அணி விளங்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் ஜூன் மாதம் 4ம் தேதி டி20 உலகக்கோப்பைத் தொடங்குகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 20 அணிகள் மோதவுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் இருக்கின்றன.

குரூப் சி பிரிவில் நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், உகான்டா, பாபுவா நியூ கினியா ஆகிய அணிகள் உள்ளன. குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபால் ஆகிய அணிகள் உள்ளன. அரையிறுதி போட்டிகள் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளிலும், இறுதி போட்டி 29ம் தேதியிலும் நடைபெறவுள்ளன.

இந்தநிலையில், டி20 உலகக்கோப்பை 2024 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், கேப்டனாக கேன் வில்லியம்சன், பின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாம்ப்மேன், டிவோன் கான்வே, லாக்கி பெர்குஷன், ட்ரெண்ட் போல்ட், மாட் ஹென்ட்ரி, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
T20 தெரியும்! T2 தெரியுமா? தெறிக்கவிடும் அடுத்த கட்டம்!
T20 Worldcup NZ team

இந்த அணியில்  டிவோன் கான்வே, டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர் என நான்கு சிஎஸ்கே வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நான்கு வீரர்களும் சென்னை அணிக்காக சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகின்றனர். மேலும் அந்த அணியில் இடம்பெற்றுள்ள மற்ற நியூசிலாந்து வீரர்களும் தரமான ஆட்டக்காரர்கள் என்பதால், நியூசிலாந்து அணி பலம் வாய்ந்த அணியாக வலம் வரும் என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்த மாதத்தின் கடைசி தேதியில் அல்லது மே மாதம் தொடக்கத்தில் டி20 அணியில் விளையாடப்போகும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com