Mohun Bagan கால்பந்து அணியைப் பிரிந்தார் பயிற்சியாளர் ஜுவான் பெர்ராண்டோ!

Juan Fernando.
Juan Fernando.
Published on

இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் மோசமாக விளையாடிய நிலையில் சூப்பர் ஜெயண்ட் மோகன் பகான் கால்பந்து அணியிலிருந்து பிரிந்தார்  தலைமைப் பயிற்சியாளர் ஜுவான் பெர்ராண்டோ.

இதையடுத்து அணியின் தொழில்நுட்ப இயக்குநர் அன்டோனியோ அப்பாஸ் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த வாரம் கலிங்கா சூப்பர் கோப்பைக்கான போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் மோகன் பகான் இதை அறிவித்துள்ளது.

கோவா எஃப்சி அணியின் பயிற்சியாளராக இருந்த ஜுவான் பெர்ராண்டோ, கடந்த 2021 டிசம்பர் மாதம்ம்தான் மோகன் பகான் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

அவரது தலைமையில்தான் மோகன் பகான் கடந்த சீசனில் மோகன் பகான் ஐ.எஸ்.எல். பட்டத்தை வென்றது. மேலும் ஏஎப்சி கோப்பைக்கான மண்டலங்களுக்கு இடையிலான போட்டியில் அரையிறுதியை எட்டியது. பெர்ராண்டோ பயிற்சியாளராக இருந்த போதுதான் மோகன் பகான் துராந்த் கோப்பையையும் வென்றது.

சமீபகாலமாக மோகன் பகான் அணியின் ஆட்டத் திறமை குறைந்து கொண்டே வந்தது. ஏஎப்சி கோப்பைக்கான போட்டியில் குழு போட்டியிலேயே வெளியேறியது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த்தை அடுத்து ஐ.எஸ்.எல். தரவரிசையில் ஐந்தாவது இடத்துக்கு சென்றது.

எனினும் இந்த ஆண்டு துராந்த் கோப்பையையும், கடந்த (2022-23) சீசனில் ஐ.எஸ்.எல். பட்டம் வென்றதற்காக மோகன் பகான் ஜுவான் பெர்ராண்டோவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.

ஹப்பாஸ் முன்னதாக 2021-22 இல் ஏடிகே மோகன் பகான் அணியை நிர்வகித்து வந்தார். இரண்டு முறை ஐ.எஸ்.எல். பட்டம் வெல்லவும் அவர் காரணமாக இருந்தார். இரண்டு முறை ஐ.எஸ்.எல். பட்டம் வென்ற முதல் தலைமை பயிற்சியாளர் ஹப்பாஸ்தான்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரான ஹப்பாஸ் முதன் முதலாக தனது பயணத்தை அட்லெடிகோ டீ கொல்கத்தா அணியில் தொடங்கினார். 2014 இல் முதல் முறையாக ஐ.எஸ்.எல். பட்டத்தை கைப்பற்றினார்.

இதையும் படியுங்கள்:
சூப்பர் சுவையில் கேரமல் கஸ்டர்ட் செய்யலாம் வாங்க! 
Juan Fernando.

எப்.சி. புனே அணியின் பயிற்சியாளராக இருந்த அவர் பின்னர் எப்.சி. ஏடிகே அணியில் சேர்ந்தார். 2019-20 இல் அவரது தலைமையில்தான் ஏ.டி.கே. எப்.சி. அணி ஐ.எஸ்.எல் பட்டம் வென்றது.

பின்னர் மீண்டும் ஏடிகே மோகன் பகான் அணிக்கு அவர் திரும்பினார். 2021-22 இன் பிற்பகுதியில் எப்.சி. கோவா அணியிலிருந்து விலகி மோகன் பகான் அணியில் சேர்ந்தார். ஹப்பாஸ் தற்போது அணியின் தொழில்நுட்ப இயக்குநராக உள்ளார்.

கலிங்கா சூப்பர் கோப்பைக்காக வரும் ஜனவரி 9 ஆம் தேதி மோகன் பகான், தனது பரம எதிரியான ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணியுடன் மோத உள்ளது. பின்னர் ஜனவரி 19 இல் இரு அணிகளும் மீண்டும் மோத உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com