கேரமல் கஸ்டர்ட் உணவு உலகம் முழுவதும் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும். இது கேரமல் கிரீம், கேரமல் புட்டிங் என பல பெயர்களில் அழைக்கப்படும் பிரெஞ்சு உணவு. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். சர்க்கரை, பால், முட்டை, வெண்ணிலா எசன்ஸ் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி எளிதாக செய்யலாம். ஆனால் இதை சரியான பதத்திற்கு செல்வதற்கு சில நுட்பங்கள் உள்ளது. இந்த பதிவில் சரியான பதத்திற்கு எப்படி கேரமல் கஸ்டர்ட் செய்யலாம் என தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
பால் - 300ml
முட்டை - 3
சர்க்கரை - ½ கப்
வெண்ணிலா எசன்ஸ் - ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் பாலில் ¼ கப் சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சி ஆற வைக்கவும். பின்பு அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கி பீட் செய்ய வேண்டும். பின்னர் அதில் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து வடிகட்டிக் கொள்ளுங்கள்.
பின்னர் தனியாக ஒரு வாணலியில் கால் கப் சர்க்கரை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கிளறினால் கெட்டியான பதத்திற்கு கேரமல் உருவாகும். அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
பின்னர் அதில் பாலை ஊற்றி கலக்காமல் அப்படியே விடவும்.
அடுத்ததாக குக்கரின் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து, பாலும் கேரமலும் சேர்த்து வைத்துள்ள பாத்திரத்தை அதில் வைத்து 30 நிமிடம் மிதமான சூட்டில் வேகவிட்டு எடுத்தால், சூப்பர் சுவையில் கேரமல் கஸ்டர்ட் தயார்.