நடால் சாதனை சமன்!

விளையாட்டு
நடால் சாதனை சமன்!
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on

ஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் பத்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். மேலும், அதிக கிராண்ட் ஸ்டாம் பட்டங்களை (22) வென்ற ஸ்பெயினின் ரஃபேல் நடாலின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.  (22 vs 22)

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில், கிரீஸ் வீரர் ஸ்டெபளோஸ் சிட்சிபாஸ் (5ஆவது ரேங்க், 24 வயது) உடன் சேர்ந்து மோதிய 35 வயது ஆகிய ஜோகோவிச் (4ஆவது ரேங்க்) 6 – 5; 7 – 4; 7 – 6 என்கிற நேர்செட்களில் வென்று 10ஆவது முறையாக ஆஸி ஓபன் கோப்பையைக் கைப்பற்றினார்.

2 மணி நேரம் 56 நிமிடங்கள் கடுமையான விளையாட்டு, பார்க்க பரபரப்பாக இருந்தது.

முதல் பரிசாக ` 26.5 கோடி இவருக்கு வழங்கப்பட்டது.

ஏ.டி.பி. ஒற்றையர் தர வரிசையில் மீண்டும் நம்பர் 1 அந்தஸ்தைக் கைப்பற்றினார் ஜோகோவிச்.

முதன்முறையாக:

ஸி ஓபனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய பெலாரஸ் வீராங்கனை அரினா சபெலன்கா முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் எலா ரைபாகினாவுடன் விளையாடிய சபலென்கா (24 வயது; 5ஆவது ரேங்க்) முதல் செட்டில் 4 – 6 என்று எடுத்துப் பின்தங்கிய போதும் அடுத்தடுத்து விளையாடிய இரு செட்களிலும் அபாரமாக விளையாடி 6 – 3; 6 – 4 என்று எடுத்து கோப்பையை வென்று முதல் பரிசாக `  26.5 கோடியைத் தட்டிச்சென்றார்.

logo
Kalki Online
kalkionline.com