தேசிய சீனியர் கேரம் போட்டி: தங்கம் வென்றது தமிழக பெண்கள் அணி!

கேரம் போட்டி
கேரம் போட்டி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

டெல்லியில் நடைபெற்ற 50-வது தேசிய சீனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக பெண்கள் அணி தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழக கேரம் பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றதில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் தனியார் பள்ளி +2 மாணவிகள் கொண்ட குழு, இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த குழுவில் இடம்பெற்ற சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் சக்திவிகாஸ் தனியார் பள்ளியில் +2 பயின்று வரும் வீராங்கனை ராஜேஸ்வரி உட்பட பலர் இடம் பெற்றிருந்தனர்.

இன்று காலை சொந்த ஊர் திரும்பிய இந்த தங்க மங்கைகளுக்கு பலத்த வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தன.

logo
Kalki Online
kalkionline.com