ரோஹித் ஷர்மாவின் புதிய சாதனைகள்!

Rohit sharma
Rohit sharma
Published on

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒருநாள் தொடரின் கேப்டனாக புதிய சாதனையை படைத்திருக்கிறார். இதுகுறித்தான முழு செய்தியையும் பார்ப்போம்.

சமீபக்காலமாக ரோஹித் ஷர்மா பல விமர்சனங்களை சந்தித்து வந்தார். ஆஸ்திரேலியா உடனான தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது. அப்போதே பிசிசிஐ ரோஹித் ஷர்மாவை வார்ன் செய்தது. இதனையடுத்து வரும் சாம்பியன்ஷிப் ட்ராபியில் இந்திய அணியை வெற்றிபெற வைத்தால் மட்டுமே ரோஹித் ஷர்மாவால் இந்திய அணியில் தொடர முடியும் என்ற நிலை வந்துள்ளது.

இதுவே ரோஹித் ஷர்மாவுக்கு பிசிசிஐ அளிக்கும் கடைசி வாய்ப்பு.

இந்த ஒரே வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இந்திய அணியை சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையில் வெற்றியடைய வைத்தார்.

இதற்கு முன்னர் நடந்த இந்தியா இங்கிலாந்து தொடரின் இரண்டாவது போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் அடித்தார். அதன்மூலம் கம்பேக் கொடுத்தார்.

சாம்பியன்ஷிப் தொடரை சிறப்பாக வழி நடத்திய ரோஹித் ஷர்மா இந்த தொடர் மூலம் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார்.

அதாவது ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக  2500 ரன்களை நிறைவு செய்திருக்கிறார் இந்தியக் கேப்டன் ரோஹித் ஷர்மா. ஐசிசி நடத்தும் அனைத்துவிதமான தொடர்களிலும் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டன் என்ற தனித்துவ சாதனையையும் ரோஹித் சர்மா படைத்தார்.  

பல காலங்களாக மோசமான விமர்சனங்களை ரோஹித் ஷர்மா படைத்திருந்தாலும், தற்போது சாதனை மேல் சாதனைகளை அவர் படைத்திருக்கிறார்.

ரோஹித் சர்மா 2007 டி20 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களை வென்று இருக்கிறார். இதில் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை அவர் கேப்டனாக வென்றுள்ளார்.  

அதேபோல் ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் வீரர்களாக நான்கு ஐசிசி கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதையும் படியுங்கள்:
இலக்குகளுக்கு பதிலா சிஸ்டம் எப்படி செட் பண்றதுன்னு தெரியுமா?
Rohit sharma

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com