நியூசிலாந்தைச் சேர்ந்த பவுன்சர் கிங் நெய்ல் வாக்னர் ஓய்வு அறிவிப்பு!

Neil wagner
Neil wagner
Published on

நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான நெய்ல் வாக்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். உலகளவில் பவுன்சர் கிங் என்றழைக்கப்படும் இவர் தனது 37 வயதில் ஓய்வை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா நாட்டைச் சார்ந்த நெய்ல் வாக்னர், அவரது நாட்டில் அவருக்குச் சரியான வாய்ப்புக் கிடைக்காததால், 2008ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டிற்குக் குடிப்பெயர்ந்தார். அதன்பின்னர் அவர் நியூசிலாந்தில் வெகுகாலமாகப் போராடி உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். அதன்பின்னர் 2012ம் ஆண்டுதான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியில் அறிமுகமானார். முதலில் முழு வேகத்துடன் துல்லியமாகப் பந்துவீசிய நெய்ல் வாக்னர் போகப் போக பவுன்சர் வீச ஆரம்பித்தார். தற்போது உலகிலேயே துல்லியமாக பவுன்சர் வீசும் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமை இவரையே சாரும்.

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்த இவரின் வேகப்பந்து வீச்சுக்கு நம்பர் 1 பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தே தாக்குப்பிடிக்க முடியாது. பலமுறை வெகு நேரமாக ரன் எடுக்க விடாமல் நெய்ல் பந்துவீசுவார். இவரது பவுன்சர்கள் பல வீரர்களின் உடலைத் தாக்கியிருக்கிறது. அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களால் தொடர்ந்து அதிக ஓவர் பந்து வீச முடியாது என்ற கூற்றை உடைத்து நீண்ட நேரம் பந்து வீசியவர் நெய்ல்.

இப்படி நெய்ல் வாக்னர் சிறந்த பவுன்சராக மாறியதருக்கு காரணம் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் ஆவார். நெய்ல் ஒரு 12 வயதாக இருக்கும்போது தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் விளையாடும்போது, ஆலன் ஆதர்டனுக்கு அச்சுறுத்தும் விதமாக பந்துவீசியதைப் பார்த்துதான் பவுன்சராக வேண்டும் என்று நெய்லுக்கு ஆசை வந்தது.

நெய்ல் இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் மொத்தம் 260 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோல் சராசரி 27.57 மற்றும் ஆவரேஜ் 52.7 ஆகும். இது நியூசிலாந்து பந்துவீச்சாளர்களிடையே இரண்டாவது சிறந்த ஸ்ட்ரைக் ரேட் ஆகும்.

இதையும் படியுங்கள்:
Ranji Trophy: 7 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி.. 36 வருடக் கனவு நிறைவேறுமா?
Neil wagner

நியூசிலாந்து அணியும் ஆஸ்திரேலியா அணியும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் நெய்ல் இடம்பெறவில்லை என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியதும் அவர் இந்த ஓய்வை அறிவித்துள்ளார். இந்த நிலையில் நெய்லை இந்த டெஸ்ட் போட்டிகளில் ஆலோசானை வழங்க வேண்டுமெனக் கூறி நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை கவுரவப்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com