அடுத்து வரும் அலை - T20 உலகக் கோப்பை!

T20 WORLD Cup
T20 WORLD Cup

போகிற போக்கைப் பார்த்தால், கடல் அலைகள்கூட ஓய்வு எடுத்துக்கொள்ளும்போல் இருக்கு, T 20 கிரிக்கெட்டை ஒப்பிடும்பொழுது.

ஐ பி எல் எப்ப முடியும் என்று பார்க்கும் முன்பே, T 20 உலகக் கோப்பை ஆட்டங்கள் வரிசைக் கட்டிக் கொண்டு நிற்க ரெடி ஆகி வருகின்றன. கிரிக்கெட் எங்கும் வியாபித்து வருகின்றது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

கால்பந்து அதுவும் அமெரிக்கன் சாக்கர் (American Soccer) விளையாட்டுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த அமெரிக்க மண்ணில், செயற்கை முறையில் தயார் செய்யப்பட்டுள்ள ஆடு தளத்தில் (Artificial pitch) கிரிக்கெட் மேட்ச்சுக்கள், குறிப்பாக T20 முறை முன்னேறி வருகின்றது படு வேகமாக என்பதும் இதை நிரூபித்துள்ளது.

தற்பொழுது மிகவும் ஆக்ரோஷத்துடன் நடைபெற்று வரும் ஐ பி எல் மேட்ச்சுக்கள் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ளன. இந்த முறையும்

ஐ பி எல் கோப்பை இந்த டீமிற்குத்தான் என்று எதிர்பார்ப்பை போட்டிக்கு முன்பு உண்டு செய்த அணியானது, புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இல்லை. இறுதி ஆட்டத்தில் எந்த இரு அணிகள் மோதும் என்பது கேள்விகுறியாக இருப்பதுடன் பல வகை ஊகங்களுக்குக் கதவுகளைத் திறந்து வைத்துள்ளது.

எது எப்படியோ தினம் நடைபெறும் ஐ பி எல்.ஆட்டங்கள், எதிர்பாராதவைகளையும் அளித்து அசத்துகின்றன என்பது உண்மை.

வாதங்கள், விவாதங்கள், திரில் சூழ்நிலைகள், ஆச்சரியங்கள், மகிழ்ச்சிகள், அதிர்ச்சிக்கள், ஷாக்குகள் இவைகளின் கலவையாக, ஐ பி எல் ஆட்டங்கள் பார்க்கும் ரசிகர்களைத் திக்குமுக்காடச் செய்து வருகின்றன.

இந்த முறை T 20 உலக கோப்பை போட்டியில் பங்கு பெரும் 20 அணிகளில், புது அணிகளும் உண்டு.

இதையும் படியுங்கள்:
“தொடர்ந்து போராடுவேன்” – தோல்வியை சந்தித்த மும்பை அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா!
T20 WORLD Cup

பல ஆட்டக்காரர்கள் பற்றி அவ்வளவாக அறியாததால் எந்த எந்த அணிகள், அடுத்தக்கட்டத்திற்குச் செல்லும், எந்த வகை முடிவுகள் இருக்கும் என்று இப்பொழுதே கூறுவது கடினம். அனுபவப்பட்ட அணிகளின் ஆட்டங்கள் எவ்வாறு செல்லும் என்று கணிக்க முடியாத சூழ்நிலையும் உள்ளது. போட்டி ஆரம்பித்து சில கட்டங்களுக்குப் பிறகு, கணிக்கும் சூழ்நிலை உருவாக வாய்ப்புகள் அதிகம். ஐ பி.எல் ஆட்டங்கள் மாதிரி விறுவிறுப்பிற்கும், பரபரப்பிற்கும் குறைவு இருக்காது என்று நம்பலாம். ஐ பி எல் போட்டிகளில் பல்வேறு அணிகளில் விளையாடிய சில ஆட்டக்காரர்கள் எதிரணியில் தங்கள் நாட்டிற்காக ஆடுவார்கள்.

டெக்னாலஜி மேம்பட்டு இருக்கும் இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு ஆட்டக்காரரின் நிறை, குறைகள் பற்றி முன்கூட்டியே அறிந்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பதும் மறுக்கவும், மறக்கவும் முடியாத உண்மை.

தொடர்ந்து பேசுவோம்! அலசுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com