இந்திய அணியை இனி எந்த கொம்பனாலும் தொடமுடியாது – சூர்யகுமார் யாதவ்!

SKY
SKY
Published on

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து, இந்திய அணியை யாராலும் தொடமுடியாது என்று பேசியிருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.

இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் போட்டியில் மழை குறுக்கிட்டதால், இந்திய அணிக்கு 8 ஓவர்களில் 78 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி இந்த இலக்கை வெறும் 6.3 ஓவர்களிலேயே அடைந்து வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 15 பந்துகளில் 30 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 12 பந்துகளில் 26 ரன்களும், ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் 22 ரன்களும் விளாசினர்.

இதனால் இந்திய அணி இதுவரை இந்தத் தொடரில் 2 வெற்றிகள் அடைந்துள்ளது. அதேபோல், இலங்கை அணி இன்னும் ஒரு வெற்றிக்கூட பெறவில்லை. இதனால், சூர்யகுமார் கேப்டன்ஸிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்த வெற்றிக்குறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், “இந்த இரண்டு போட்டிகளில் விளையாடிய அதே முறையில்தான் இனியும் விளையாடப் போகிறோம். வானிலையை கருத்தில் கொண்டு பவுலிங்கின் போது 160 ரன்களுக்கு கீழ் இலங்கை அணியை கட்டுப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று கருதினோம். அதேபோல் மழையும் எங்களுக்கு உதவியாக அமைந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள்.

இந்த வெற்றிக்காக மகிழ்ச்சியடைகிறோம். ஏனென்றால் ஆட்டம் கைகளை விட்டு செல்லும் போது மீண்டு எழுந்து வென்றுள்ளோம். இனி வரும் போட்டிகளில் எந்த வீரர்களையெல்லாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இனிதான் யோசிக்க வேண்டும். இனி யாராலும் இந்திய அணியை தொடக்கூட முடியாது.” என்று பேசினார்.

இதையும் படியுங்கள்:
பண்டைய ஒலிம்பிக் பந்தயங்களில் போட்டியாளர்கள் நிர்வாணமாக பங்கேற்றனர் என்பது தெரியுமா?
SKY

இந்த தொடரின் மூன்றாவது டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இப்போட்டியில், வாஷிங்டன் சுந்தர், கலீல் அஹ்மத் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவுடன் களமிறங்கும் முதல் தொடர் இது. அப்படியிருக்க, இந்த தொடரில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றிபெற்றது, கம்பீரின் திட்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com