T20 Worldcup: “இந்த நான்கு அணிகள் அரையிறுதிக்குச் செல்லும்” – பிரையன் லாராவின் கணிப்பு!

Brain Lara
Brain Lara

இன்னும் சில தினங்களில் டி20 உலக்கோப்பை தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் பிரையன் லாரா, இந்த நான்கு அணிகள் கட்டாயம் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் ஜூன் மாதம் 2ம் தேதி டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 20 அணிகள் மோதவுள்ளன. 20 அணிகளும் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து மோதவுள்ளன. அரையிறுதி போட்டிகள் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளிலும், இறுதிபோட்டி 29ம் தேதியிலும் நடைபெறவுள்ளன.

டி20 இந்திய அணியில், கேப்டனாக ரோஹித் ஷர்மாவும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சப்ஸ்ட்டிட்யூட் வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹமது, ஆவேஷ் கான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர்க்கொண்ட உலகக்கோப்பை தொடரில், தொடக்கம் முதல் ஒரு போட்டிக்கூட தோல்வியடையாமல் விளையாடிய இந்திய அணி, இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. இதனால், ரசிகர்கள் எழுப்பிய எதிர்பார்ப்பு என்ற வானளவு கோட்டை ஒரே நிமிடத்தில் சரிந்து விழுந்தது. இதனால், இந்திய வீரர்களும் ரசிகர்களும் பெரும் மன உளைச்சலடைந்தனர். குறிப்பாக ரோஹித் ஷர்மா, அந்தத் தோல்வியிலிருந்து வெளியே வர முடியாமல் திணறினார்.

இதனையடுத்து லாரா எந்தெந்த அணிகள் அரையிறுதி போட்டிகளுக்கு செல்லும் என்று கணித்துள்ளார். லாரா தன்னுடைய கணிப்பில்  இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் ஆப்கானிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு செல்லும் என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த கணிப்பு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் சர்பிரைஸாக இருக்கிறது. லாரா இதுகுறித்து பேசும்போது, பேட்டிங், பவுலிங் மற்றும் ஆல்ரவுண்டர்கள் என சரிசமவிகிதத்தில் ஆப்கானிஸ்தான் அணி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
என்ன…? இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தாரா பிரதமர்?
Brain Lara

மேலும், குருபாஸ், ரஷித்கான், முகமது நபி, நூர் முகமது ஆகியோருக்கு, பல நாடுகளில் நடைபெறும் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவம் இருப்பதாகவும், அதனால் அவர்கள் 20 ஓவர் உலக கோப்பையில் மிகச்சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பல அணிகளுக்கு அவர்கள் அதிர்ச்சி கொடுத்து தோற்கடிக்கவும் வாய்ப்புள்ளதாக லாரா தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com