ஓய்வு பெறுகிறாரா ஜோகோவிச்?

Djokovic retirement.
Djokovic retirement.

"டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவது குறித்து இப்போது நான் யோசிக்கவில்லை" என்று 36 வயதான நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார். 24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற அவர் இன்னும் புத்துணர்வுடன் இருக்கிறார். இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் காலிறுதியில் நுழைந்துள்ளார்.

நான்காவது சுற்றுக்கான போட்டியில் ஜோகோவிச், மூத்த வீர்ர் அட்ரியன் மன்னரினோவை 6-0, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார். இதற்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், பென் ஷெல்டனை வென்றது குறிப்பிடத்தக்கது.

டென்னிஸ் ஆட்டத்தின் உச்சத்தில் இருக்கும் நிலையில் அவர் ஓய்வுபெறவிரும்பவில்லை. எனினும் தனிப்பட்ட க்காரணங்களுக்காக நிலைமையில் மாற்றம் ஏற்படலாம் என்றும் ஜோகோவிச் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு சில சமயங்களில் நான் இதைப் பற்றி பலமுறை பேசினேன். மேலும் நான் முதல் நிலை ஆட்டக்காரராக இருக்கும் நிலையில் டென்னிஸை விட்டு வெளியேற எனக்கு மனமில்லை. நான் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். என்னால் சக வீர்ர்களுக்கு இணையாக போராட முடியாத நிலை ஏற்பட்டால், கிராண்ட் ஸ்லாம் பட்டத்துக்கான போட்டியாளராக இருக்கமுடியாது என்று எனக்குத் தோன்றினால், ஓய்வுபெறுவது குறித்து யோசிப்பேன் என்றார் ஜோகோவிச்.

ஆனால், எதுவும் மாறலாம். வெளிப்படையாக கூறினால் நிறைய விஷயங்கள் மாறலாம். நான் இளைஞன் இல்லை. நான் ஒரு தந்தை, கணவரும்கூட. எனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு விஷயங்கள் நடக்கின்றன. அதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். அதற்கும் ஆற்றல் தேவை. இன்று நான் இருக்கும் நிலைக்கு கடவுளின் கருணைதான் காரணம். நாளை என்ன நடக்கிறது என்பதை பிறகு பார்ப்போம் என்றார்.

இதையும் படியுங்கள்:
பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்! 
Djokovic retirement.

ரஃபேல் நடால் காயத்தால் வெளியேறிய நிலையில், அடுத்த தலைமுறை டென்னிஸ் வீர்ர்களின் கேள்வி. ஜோகோவிச்சை எப்படி தடுத்து நிறுத்துவது என்பதுதான். கடந்த ஆண்டு நடைபெற்ற நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மூன்றில் ஜோகோவிச் வெற்றிபெற்றிருந்தார். ஆடவர் ஒற்றையர் போட்டியில் ரஃபேல் நடாலைவிட அதிக கிராண்ட ஸ்லாம் போட்டிகளை வென்றுள்ளார் ஜோகோவிச்.

 இனி காலிறுதியில் ஜோகோவிச், 12 ஆம் நிலை ஆட்டக்காரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை சந்திக்கிறார். முன்னதாக டெய்லர் பிரிட்ஸ், ஸ்டெபான்ஸ் ஸிட்சிபாஸை நான்காவது சுற்றில் வென்று காலிறுதிக்கு நுழைந்துள்ளார்.

ஜோகோவிச் இந்த ஆண்டின் முதல் மூன்று கிராண்ட்ஸ்லாம்களை வென்ற பிறகு, டோக்கியோ ஒலிம்பிக்கிற்குச் சென்றார். ஆனால், ஒலிம்பிக்கில்  அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் தோற்றார். அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் அவர் மெத்வதேவிடம் தோற்றுப்போனார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com