நலம் பல தரும் நாவல் பழம்!

நலம் பல தரும் நாவல் பழம்!

டி மாதம் பிறக்கப்போகிறது என்றாலே ஆங்காங்கே கடைகளில் கருமை நிறத்தோடு கண்ணைப் பறிக்கும் நாவல் பழ வியாபாரமும் தொடங்கி விடும். உடலின் பல்வேறு பிரச்னைகளைப் போக்கும் அருமருந்தாக விளங்குகிறது இந்த நாவல் பழங்கள். இந்தப் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளன. நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணம் மிக்கதாக விளங்குகிறது.  

நாவல் மரத்தின் கொழுந்து இலைகளை நன்றாக நசுக்கி சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி அளவு நாள் ஒன்றுக்கு இரண்டுவேளை வீதம், மூன்று நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கைக் குணப்படுத்தலாம். அதோடு, இந்த சிகிச்சை மலச்சிக்கலை குணப்படுத்துவதோடு, பித்தத்தையும் தணிக்கவல்லதாகும். மேலும், இது இதயத்தை சீராக இயங்கச் செய்யும். ரத்த சோகை நோயை குணப்படுத்தும். சிறுநீரகக் கற்களைக் கரைப்பதிலும் நாவல் பழம் பெரும் பங்காற்றுகிறது.

நாவல் பழத்தின் விதையில், ‘ஜம்போலைன்’ என்ற குளூக்கோசைட் இருக்கிறது, நாவல் பழத்தை சாப்பிடுவதால் உடலில் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் நாவல் பழத்தின் விதைகளை நன்கு இடித்து தூளாக்கி அதை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு வர, நீரிழிவு நோயினால் உண்டான சிறுநீர்ப்போக்குக் குறையும். நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் அருந்தி வர, நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைந்து விடுவதைக் காணலாம். மூன்று மாதத்துக்குள் நீரிழிவு நோயை முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம். குடற்புண்ணை குணப்படுத்துவதிலும் நாவல் பழம் சிறப்பாகச் செயல்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com