

முந்தைய காலங்களைப் போல இப்போது கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் இருப்பது இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கிரிக்கெட் விளையாட்டுக்கும் ஐபிஎல் போன்ற டி20 உள்ளூர் தொடர்கள் வந்த பின்பு பெருமளவில் மாறி உள்ளது. முன்பெல்லாம் சராசரியாக ஒரு பேட்ஸ்மேன் ஒரு பந்திற்கு ஒரு ரன் அடித்தால் , அது சிறப்பான பேட்டிங் என்று அழைக்கப்பட்டு இருந்தது. இன்றைய காலகட்டங்களில் 40 பந்துகளுக்குள் சதம் அடிப்பதை சிறப்பான ஆட்டம் என்று வகைப்படுத்தப்பட்டு விட்டது.
அதிவேகமாக மாறி உள்ள கிரிக்கெட் பேட்டிங் அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றை மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ மற்றும் தனது அதிரடி ஆட்டத்தினால் புகழ்பெற்ற கிரிஸ் கெய்ல் ஆகியோர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். இவர்களின் கருத்துக்கள் இந்த காலத்திற்கு சரியாக பொருந்துவதாகவும் அனைவருக்கும் ஏற்படுவதாகவும் இருக்கிறது.
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் போது, இவர்கள் தெரிவித்த இந்தக் கருத்துகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய கிரிக்கெட்டில் சர்வதேச அணிகளின் பேட்டிங் முறைகள் மாறி உள்ளன. இளம் வீரர்கள் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்றனர். இவர்கள் தற்காப்பற்ற அச்சமற்ற ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். வரும் காலங்களில் ஒரு நாள் போட்டிகளில் 500 ரன்களை குறிப்பது சாதாரணமாக மாறுவதுடன், அந்த இலக்கை விரட்டி வெற்றிகரமாக சேசிங் செய்ய முடியும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
கிரிக்கெட் போட்டிகளில் தற்போது பேட்ஸ்மேன்களின் கை ஓங்கி உள்ளது. இந்த காலகட்டத்தில் பந்துவீச்சாளர்கள் தங்களது வழக்கமான உத்திகளை மாற்றிக் கொள்வதுடன் புதுமையான திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் , என்று பிராவோ அறிவுரை கூறியுள்ளார்.
"பேட்ஸ்மேன்களின் ரன் அடிக்கும் வேகம் அதிகரித்துள்ளதால், பந்துவீச்சாளர்கள் அவர்களுக்கு சவால் விடும் வகையில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதால் பந்துவீச்சாளர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். நல்லவேளையாக நான் விளையாடிய நாட்கள் முடிந்து விட்டன," என்று சிரித்துக் கொண்டே கூறினார்
அவரைத் தொடர்ந்து கிறிஸ் கெய்ல், பேட்ஸ்மேன்களின் சாதனைகளை கண்டு தான் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். இன்றைய இனம் தலைமுறை வீரர்கள் முதல் பந்தில் இருந்தே ரன் அடிக்கும் வேகத்தில் இருக்கிறார்கள். அதிக ரன்களை குவிக்கும் ஆர்வம் அவர்களுக்கு உள்ளது. முந்தைய காலகட்டத்தில் ஒரு அணி 300 ரன்கள் குவிப்பது, ஒருநாள் போட்டிகளில் பாதுகாப்பான மற்றும் பெரிய இலக்காகக் கருதப்பட்டது. ஆனால், இன்று 350 முதல் 400 ரன்கள் வரை குவித்தாலும் அதை எளிதாக சேசிங் செய்யும் இலக்குகளாக மாறி உள்ளது.
சமீபத்திய காலங்களில் நடத்தப்பட்ட போட்டியலில் கிரிக்கெட் அணிகள் காட்டும் பேட்டிங் ஆதிக்கத்தின் படி , எதிர்காலத்தில் 500 ரன்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டும் சாத்தியம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் கூட இந்திய அணி 404 ரன்களை எளிதாக விரட்டி குறைந்த ஓவர்களிலேயே வெற்றி பெற்றது, என்று கெய்ல் கூறியுள்ளார்