ஓஹோ பாட்டி வைத்தியம்!

ஓஹோ பாட்டி வைத்தியம்!

இரவில் சின்ன வெங்காயத்தை உப்பு சேர்த்து ஊற வைத்து, காலையில் பேஸ்டாக அரைத்து மருவில் தடவி வந்தால், மரு விரைவில் உதிர்ந்து விடும். 

தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று தின்றால் கண் பார்வை தெளிவாகும்

இரவில்  தூங்கும் முன் இரண்டு கிராம்பு வாயில் போட்டு மென்று  தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

முதுகு வலிக்கு வெற்றிலைச் சாறு பிழிந்து, அத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து தடவினால் முதுகு வலி சரியாகும்.

இரண்டு மிளகை எடுத்து விளக்கில் எரித்து இந்த புகையை சுவாசித்தால் தலைவலி மற்றும் தொண்டை சளியிலிருந்து விடுபெறலாம்.

முருங்கைப்பூவை பருப்புடன் சமைத்து உண்டு வர கண் எரிச்சல் சரியாகும்.

சோறு வடித்த  கஞ்சியுடன் தேன் கலந்து சீரகம் சேர்த்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும். தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட ஆயுளுக்கும் இடுப்பு வலி வராது.

குப்பைமேனி சாற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்து சுண்டக் காய்ச்சி உடலில் தேய்த்தால் உடல் வலி, மற்றும் மூட்டு வலி குணமாகும்.

பாகல் இலையைப் பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் அடிக்கடி வரும் ஏப்பம் சரியாகும்.

திருநீற்றுப்பச்சிலையை முகர்ந்து பார்த்துவிட்டு தலையணையின் அடியில் வைத்து தூங்கி பாருங்கள் தானாக தூக்கம் வரும்.

தூதுவளை கற்பூரவல்லி துளசி இம்மூன்றையும் சம அளவு சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடம்பில் சளி சேராது. இருந்தாலும் வெளியேறிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com