ஒலிம்பிக் போட்டிகள் - தங்கம் வெல்லும் வீரர்களுக்கு 4.60 கோடிகள்! அறிவித்தது யார்?

Olympic
Olympic
Published on

தொடக்க கால ஒலிம்பிக் கி.மு.776 ல் தொடங்கியது. அந்தக் கால ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆலிவ் மர இலை மாலைகளே பரிசாக வழங்கப்பட்டனஅதற்கு பிறகு ஒலிம்பிக்கில் முதல் இரண்டு பதக்கங்கள் மட்டுமே, (வெள்ளியையும், வெண்கலமும்) மட்டுமே வழங்கினார்கள்

ஒலிம்பிக் போட்டி தொடங்கிய போது பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. 1900 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தான் பெண்கள் கலந்து கொண்டனர்

தொடக்க காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் கிரேக்கர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

தொடக்க கால ஒலிம்பிக் போட்டிகளில் குதிரைப் பந்தயம், ரதப்போட்டி, மல்யுத்தம் போன்றவைகள் இடம் பெற்றுள்ளன.

கி.பி 393 ல் ரோமாபுரி சக்கரவர்த்தியான தியோடோசியஸ் ஒலிம்பிக்கை நிறுத்தினார்

நவீன ஒலிம்பிக் போட்டியை உருவாக்கியவர் பியரே கோபர்டின் பிரபு.

1896 ம் ஆண்டு நவீன ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடந்தது.

ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்படும் குறிக்கோள் வார்த்தையான 'வேகம் , உயர்வு , வலிமை'. இதை உருவாக்கியவர் பாரிஸ் நகரில் வேலை பார்த்த ரெவரண்ட் பாதர்டிடான் எனும் ஒரு பள்ளி தலைமை ஆசிரியர். இவர் நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தந்தை எனப்படும் பியரே கோபர்டினின் பள்ளி நண்பர்

ஆரம்பத்தில் மாரத்தான் போட்டியின் தூரம் 26 மைல் 385 கஜம். இதனால் பெண்கள் அனுமதிக்கப்பட்டவில்லை.

1984 ம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தான் ஒலிம்பிக் மாரத்தான் போட்டிகளில் பெண்கள் கலந்து கொண்டனர்

இந்தியா 1928 ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தான் முதல் முறையாக தங்கப் பதக்கத்தை பெற்றது.

இதையும் படியுங்கள்:
உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இன்று தொடக்கம்!
Olympic

ஹாக்கி போட்டிகளில் இந்தியா 1928 முதல் 1956 வரை தொடர்ந்து 6 முறை தங்கம் வென்றது. ஒலிம்பிக் ஹாக்கி ஆட்டத்தில் வல்லரசாக இருந்த இந்தியா 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 11 பதக்கங்களை வென்றுள்ளது. 1980 ல் கடைசியாக தங்கம் வென்றது

1988 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் முதல் முறையாக இடம் பெற்றது.

1992 ம் ஆண்டு ஒலிம்பிக்கில் 'ஷாட்டில் பேட்மிண்டன்' பதக்க விளையாட்டாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே ஒரு முறை 1900 ம் ஆண்டு   கிரிக்கெட் இடம் பெற்றது

இன்று ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் வீரர்கள் 'ஆன்டி கிளாக்வைஸ்' (கடிகாரம் சுற்றும் முறைக்கு எதிரான முறை) திசையில் ஓடி வர வேண்டும் என்பது விதி. ஆனால் ஆரம்பத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் 'கிளாக்வைஸ்' திசையில் தான் வீரர்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்கள் வென்று ஆதிக்கம் செலுத்தி வருவது அமெரிக்காதான்.

ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருவது ஒருங்கிணைந்த ரஷ்யா நாடு தான்

எகிப்து நாடு 1948 ல் லண்டன் ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றது. அதன் பிறகு 56 வருடங்களுக்கு பிறகு 2004 ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த  போட்டியில் தங்கம் வென்றது.

இதையும் படியுங்கள்:
விளையாட்டுகளின் தோற்றம் இப்படித்தான் இருந்திருக்குமோ?
Olympic

1972 ம் ஆண்டு ஜெர்மன் நாட்டு மூனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அது வரை இல்லாத வகையில் 195 போட்டிகள் நடத்தப்பட்டன. 121 நாடுகளில் இருந்து 7000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தியா ஹாக்கி போட்டியில் ஒலிம்பிக்கில் தொடர்ந்து 6 முறை தங்கம் வென்றது போல ஹங்கேரி நாடு வாள் வீச்சு போட்டிகளில் தொடர்ந்து 7 முறை தங்க பதக்கங்களை வென்றுள்ளது

ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வீரர்களுக்கு அந்நாட்டினைச்  சேர்ந்தவர்கள் சிலர் பரிசுத் தொகையை அறிவிப்பார்கள். அப்படி 2004 சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வீரர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என சிங்கப்பூர் அரசு அறிவித்தது. எவ்வளவு தெரியுமா? தங்கம் வெல்லும் வீரர்களுக்கு 4.60 கோடிகள், வெள்ளி வெல்லும் வீரர்களுக்கு 2.30 கோடிகள், வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கு 1.15 கோடி. இந்த அளவுக்கு இது வரை யாரும் இப்படி அறிவித்தது இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com