எடையை குறைச்சாச்சு.. எப்படி மெயின்டெய்ன் பண்ணுவது தெரியலையா?

மாதிரி படம்
மாதிரி படம்
Published on

குறைத்த உடல் எடையை, அதன் பிறகு தக்கவைத்துகொள்வது தான் சவாலாக பார்க்கப்படுகிறது. வருடத்திற்கு நான்கு சீசன்கள் போல். உடல் எடை குறைப்புக்கும் சீசன்கள் உண்டு என்றே கூறலாம். திடீரென்று உடல் எடை மீது கவனம் செலுத்தி அதை அதிவேகமாக குறைப்பவர்கள், அதனை தக்கவைத்துகொள்ள தவறிவிடுவார்கள். குறிப்பாக குறிப்பிட்ட சில முறைகளில் உடல் எடையை குறைப்போர் ஒரே ஆண்டில் மீண்டும் அதில் 30-35 சதவீதம் அளவிற்கு பருமன் அடைந்துவிடுகிறார்கள்.

இதற்கு பல காரணங்கள் உண்டு. உடல் எடையை குறைக்கும் போது ஒரு நாளைக்கு உத்தேசமாக 800 முதல் 1200 கலோரிகள் வரை என கணக்கிட்டு உட்கொள்பவர்கள். உடல் எடை குறைந்த பின் தங்கள் பழைய உணவுமுறைக்கு மாறுவது தான் உடல் எடை மீண்டும் அதிகரிப்பதற்கு முதல் காரணம். இரண்டாவது உடல் எடை குறைக்கும் போது நாம் செய்யும் மெனகடல்கள் தற்காலிகமானது என்று தவறாக எண்ணுவது. மூன்றாவது அன்றாட உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து உடல் எடையை குறைப்போர் அது நீண்ட காலத்திற்கு பின்பற்ற முடியாத ஒரு பழ்க்கம் என்பதை உணர்வதில்லை.

சரி, இனி குறைத்த எடையை எப்படி பராமரிப்பது என்பதை பார்க்கலாம். முதலாவதாக உடல் எடை மேலாண்மையை நம் வாழ்நாள் முழுக்க பின்பற்ற வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். ஒருவேளை அதிலிருந்து தவறும்பட்சங்களில், மீண்டும் மேலாண்மையை பின்பற்ற திட்டமிட்டு தொடங்க வேண்டும். உதாரணத்திற்கு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டும் அதிக உணவு உட்கொண்டால், அந்த வாரம் முழுவதும் அதிக உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். வெளியில் ஹோட்டல்களில் சாப்பிடும் போதோ அல்லது விழாக்களில் பங்கேற்று சாப்பிடும் போதோ குறைந்த கலோரிகளை கொண்ட உணவுகளை தேடி சாப்பிடுங்கள்.

மேலும் இரவு உணவிற்கும், தூக்கத்திற்கும் இடைவெளி கொடுப்பது, இரவு உண்வுக்குப் பின் நடைபயிற்சி செய்வது உள்ளிட்ட நல்ல ப்ழக்கங்களை பின்பற்ற வேண்டும். சுறுசுறுப்பாக இருத்தல் அவசியம். மிதிவண்டி பயன்படுத்துவது பலன் தரும். குறிப்பாக உடல் எடையை பராமரிக்க ஒரு வாரத்தில் குறைந்தது 250 நிமிடங்களாவது உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இவற்றை பின்பற்றினால் நீங்கள் விரும்பும் படி உங்கள் உடல் எடையை பராமரித்துக்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com